திரு ஆரூர்ப் புராணம்

(திருவாரூர்ப் புராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரு ஆரூர் புராணம் (திருவாரூர் புராணம்) [1] தமிழில் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் சம்பந்த முனிவர். இவர் நிரம்ப அழகிய தேசிகரின் மாணாக்கர். இவர் இந்த நூலை அரங்கேற்றிய காலம் கி. பி. 1592. இது பாயிரம் உட்பட 111 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. 2929 பாடல்களைக் கொண்டது. பல்வேறு தெய்வங்களுக்கு வணக்கம் சொல்லும் பாயிரப் பாடல்கள் மட்டுமே 35 உள்ளன. நூல் விருத்தப் பாடல்களால் ஆனது.

நூலின் வரும் பாடல்களுக்கு இடையேயும் இவர் இறைவனைப் போற்றும் தோத்திரப் பாடல்கள் பலவற்றைச் சேர்த்துள்ளார். அவற்றுள் ஒன்று எடுத்துக்காட்டு; பாடல்கள் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன.

தெய்வப் பொருளே திருவாழ் நீழல்
மெய் வைத்த அறம் பொருள் வேதியனே
மை வைத்து ஒளிரும் மாணிக்கத்தானே
சைவச் சுடரே சரணம் சரணம்

கோக்குணச் சருக்கத்தில் சிவ பூசையைச் சிறப்பிக்கும் பாடல்

ஈசனை பூசை செய்யில் இறந்திடாப் பவம் ஒன்று இல்லை
ஈசனை பூசை செய்யில் எந்திடாப் பதம் ஒன்று இல்லை
ஈசனை பூசை செய்யில் எய்திடாச் சித்தி இல்லை
ஈசனை பூசை செய்யார் எய்திடா நிரயம் இல்லை.

அடிக்குறிப்புதொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு_ஆரூர்ப்_புராணம்&oldid=1430110" இருந்து மீள்விக்கப்பட்டது