திருவாலியமுதனார்

திருவாலியமுதனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.

பிறப்பு

தொகு

இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகிலுள்ள திருவாலிய நாட்டின் தலைநகர் திருவாலி நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடத்து அன்பு பூண்ட காரணத்தினால் பெற்றோர்கள் இவருக்கு திருவாலியிலுள்ள திருமாலின் பெயராகிய அமுதன் என்பதை இணைத்து திருவாலியமுதன் என்று பெயரிட்டனர்.[1]

சிவன்மீது பற்று

தொகு

வைணவ குலத்தில் தோன்றினாலும் சிவபிரானிடம் அன்பு கொண்டு சிவனடியாராக திகழ்ந்தார். சிதம்பரம் நடராசப் பெருமானை தம் குலதெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் திழைத்தார்.[1] இதன் காரணமாக நடராசப் பெருமான் மீது திருவிசைப்பா பதிகங்களைப் பாடியருளினார்.

காலம்

தொகு

இவரது காலம் 10 ஆம் நூற்றாண்டு. திருவாலி அமுதனார் திருவிசைப்பா பஞ்சகம், நட்டராகம், இந்தளம் ஆகிய மூன்று பண்களில் அமைந்து நான்கு பதிகங்களாய் 42 பாடல்களைக் கொண்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 340. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாலியமுதனார்&oldid=2718255" இலிருந்து மீள்விக்கப்பட்டது