ஒன்பதாம் திருமுறை
ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:
- சிதம்பரம் -16
- கங்கைகொண்ட சோழேச்சரம் - 1
- திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1
- திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் - 1
- திருமுகத்தலை - 1
- திரைலோக்கிய சுந்தரம் - 1
- திருப்பூவணம் - 1
- திருச்சாட்டியக்குடி - 1
- தஞ்சை பெருங்கோவில் - 1
- திருவிடைமருதூர் - 1
- திருவாரூர் -1
- திருவீழிமிழழை - 1
- திருவாவடுதுறை - 1
- திருவிடைக்கழி - 1
பதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும்
தொகு- திருவிசைப்பா:
- திருமாளிகைத் தேவர் - 45
- சேந்தனார் - 47
- கருவூர்த் தேவர் - 105
- பூந்துருத்தி நம்பிகாடநம்பி - 12
- கண்டராதித்தர் - 10
- வேணாட்டடிகள் - 10
- திருவாலியமுதனார் - 42
- புருடோத்தம நம்பி - 22
- சேதிராயர்
- திருப்பல்லாண்டு:
- சேந்தனார் - 10
- திருவிசைப்பா:
சிறு குறிப்புக்கள்
தொகு- திருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும்.
- கருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார்.
- சேதிராசர், கண்டராதித்தர், வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர்.
- தஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.
உசாவு துணை நூல்
தொகு- சைவ சமயக் கலைக் களஞ்சியம்(தோத்திரமும் சாத்திரமும்)- முனைவர்.சிவ.திருச்சிற்றம்பலம்.