திருக்கோவையார்

எட்டாவது திருமுறை

திருக்கோவையார் திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதைத் திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும்.

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

இந்நூல் 400 பாடல்களை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இஃது இயற்கைப் புணர்ச்சி முதலாகப் பரத்தையிற் பிரிவு ஈறாக 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்திரிக்கப் பட்டுள்ளனர்.

திருக்கோவையாரின் சிறப்பை உணர்த்தும் உசாத்துணைகள்

தொகு

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

திருக்குறள், நால்வேத முடிவு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரமும் (மூவர் தமிழும்), முனிவர்கள் மொழியும், திருக்கோவையாரும், திருவாசகமும், திருமந்திரமும் ஒரு வாசகமே (உணர்த்தும் உண்மைப் பொருள் ஒன்றே).

ஆய்ந்த கலித்துறை தான் நானூறு அகப்பொருண் மேல்,
வாய்ந்த நற்கோவையாம் - வச்சநந்திமாலை.

அஃதாவது, நானூறு அகப்பொருள் பாடல்களைக் கொண்டது நல்ல திருக்கோவையாம் என்கிறது வெண்பாப்பாட்டியல் எனப்படும் ‌வச்சநந்திமாலை.

உசாத்துணை

தொகு
  • தஞ்சை சரசுவதி மகால் 44-ஆம் எண் வெளியீடு.

வெளியிணைப்புகள்

தொகு

திருக்கோவையார் நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோவையார்&oldid=3321066" இலிருந்து மீள்விக்கப்பட்டது