திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வரநாத சுவாமி கோயில்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வரநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பாயும் கடனாநதிக் கரையில் அமைந்த பிரம்மதேசம் என்னும் ஊரிலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலைக் கட்டியவர் ராஜ ராஜ சோழன் ஆவார்.[1]

அருள்மிகு திருவாலீஸ்வரநாத சுவாமி கோவில்
ஆள்கூறுகள்:8°44′23″N 77°26′24″E / 8.7396°N 77.4399°E / 8.7396; 77.4399
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:பிரம்மதேசம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
ஏற்றம்:87.64 m (288 அடி)
கோயில் தகவல்
மூலவர்:திருவாலீஸ்வரநாத சுவாமி
தாயார்:சிவகாமி அம்மாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:கிபி 1,000
அமைத்தவர்:ராஜராஜ சோழன்

வரலாறு தொகு

ராஜராஜ சோழன் பல கோயில்களை கட்டியிருந்தாலும், அவனது ஆட்சிக்காலத் தொடக்கத்தில், அவன் எழுப்பிய முதல் கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனாநதியின் தென்கரையில் பிரம்மாண்டமாக வாலீஸ்வரம் என்ற பெயரில் சிவன் கோயில் உள்ளது.[2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திருவாலீஸ்வரநாத சுவாமி, சிவகாமி அம்மாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. சோழனின் கலைப்பொக்கிஷம் திருவாலீஸ்வரம் ஆலயத்தின் சிறப்புகள்!
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)

வெளி இணைப்புகள் தொகு