திருவாழி பரப்பினான் கூத்தன்

திருவாழி பரப்பினான் கூத்தன் என்னும் புலவன் ‘சிந்து’ என்னும் சிற்றிலக்கிய நூல் ஒன்று பாடினான். திருவாழி என்னும் சொல் ஆழியை வலக்கையில் கொண்டுள்ள திருமாலைக் குறிக்கும். எனவே இந்த நூல் திருமாலின் மீது பாடப்பட்டதாகலாம். அல்லது பரிசு வழங்கிய திருக்காளத்தித் தேவன் மீது பாடப்பட்டதாகலாம்.

இந்த நூலுக்குப் பரிசாக வள்ளுவப்பாக்கம் என்னும் ஊரை முற்றுட்டாகப் பெற்றான். வழங்கியவன் பொத்தம்பிச் சோழன் திருக்காளத்தி தேவன்.[1]

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. மூன்றாம் இராசராசனின் 21ஆம் ஆட்சியாண்டதான (கி.பி. 1237) காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு.