திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தி
திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தி என்பவர் கொங்கு தேச ராஜாக்கள் என்னும் புராண நூலில் கூறப்படும் ரெட்டி வம்சத்தின் ஏழாம் அரசராவார்.[1]
ஸ்கந்தபுரம்
தொகுகதையின்படி கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததைப் போல இவரும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், இசை, பரதம், மந்திரம் முதலிய கலைகளில் வல்லவனாக இருந்தார் என அறியமுடிகிறது.[2] சைவசமய கடவுளான சங்கரத் தேவர் இந்த திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தியை ஜைன மதத்திலிருந்து சைவமதத்திற்கு மாற்றினார் என்றும், ஞானம் பெற்று முக்தி அடைந்தார் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி.[1]
நிலக்கொடை
தொகுஇராமச்சந்திரன் செட்டியார் கருத்தின்படி பரத்துவாச கோத்திரத்திலே பிறந்த வித்துவான் நரசிங்க பட்ட குரு என்பவருக்கு பஞ்சதச சோடி என்ற கிராமத்தை சக வருடம் 100 அதாவது கி. பி. 178ல் ஒரு சந்திரகிரகண காலத்தில் நிலக்கொடை வழங்கியதாக சாசனம் தெரிவிக்கிறது. பஞ்சதச சோடி என்ற கிராமம் கொங்கு தேசத்தில் இருப்பதாகவும், சங்கரத் தேவர் கோவில் ஸ்கந்தபுரத்தில் இருப்பதாக கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி கூறுகிறது.[2] திருவிக்கிரமதேவ சக்கரவர்த்திஜைனத்திலிருந்து சைவத்திற்கு மாறி தானம், தவம், ஞானம் என ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டதால் ரெட்டிவம்சம் இவரோடு முடிவுக்கு வந்து கங்க வம்சம் ஆளத்தொடங்கியது.[2]
சான்றாவணம்
தொகுஆதாரங்கள்
தொகு- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai