திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோயில்
திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும்.[2] இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவெள்ளியங்குடி[1] | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருவெள்ளியங்குடி[1] |
அமைவிடம் | |
ஊர்: | திருவெள்ளியங்குடி |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோலவில்லி ராமன் |
உற்சவர்: | சிருங்கார சுந்தரன் |
தாயார்: | மரகதவல்லி |
தல விருட்சம்: | கதலி வாழை |
தீர்த்தம்: | சுக்ரதீர்த்தம், ப்ரஹமதீர்த்தம், பரசுராமதீர்த்தம், இந்திர தீர்த்தம். |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கையாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | புஷ்கலா வர்த்தக விமானம் |
கல்வெட்டுகள்: | உண்டு |
தல வரலாறு
தொகுநவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. சுக்ரபுரி என்றும் அழைப்பர். வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. வந்திருப்பது சாதாரணச் சிறுவன் அல்ல என்று மகாபலிக்கு உணர்த்தினார் சுக்ராச்சாரியார். ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் மகாபலிச் சக்ரவர்த்தி இல்லை. மகாபலி நீர் வார்த்து தானம் தரவிருக்கும் கமண்டல பாத்திரத்தின் நீர் வரும் துளையை ஒரு வண்டாக உருமாறி அடைத்து கொண்டார் சுக்ராச்சாரியார். இதை அறிந்த பகவான் நீர் வரும் தூவாரத்தை ஒரு குச்சியால் குத்த ஒரு கண்னை இழந்தார் சுக்ராசாரியர். மீண்டும் இத்தல பெருமானை நோக்கி தவமிருந்து இழந்த கண்னை பெற்றார். அசுரர்களுக்கு தச்சராக இருந்த மயன் தவமிருந்து திருமாலை வேண்ட சங்குசக்கரதாரியாக காட்சி தந்தார். பரமாத்மா இராமபிரானாக காட்சி அளிக்குமாறு வேண்டினார். திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார். பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலம். இந்த ஒரு தலத்தை தரிசித்தால் 108திவ்வியதேச க்ஷேத்திரங்களை தரிசித்த புண்ணியம் கிடைத்து விடும்.
குடமுழுக்கு
தொகுசூன் 23, 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=163
- ↑ "ஒரு வைணவ திருத்தலமாகும்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் சனவரி 1, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ கோலவல்லி ராமர் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 24 சூன் 2016