திரு ஆறாட்டு மதநாடா, மைலக்காடு

திரு ஆறாட்டு மதநாடா [1] இந்தியாவில் கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் உள்ள மயிலக்காட்டில் உள்ள சிவன் கோயிலாகும். [2] இக்கோயில் தேசிய நெடுஞ்சாலை 47- ல் சாத்தனூருக்கும் கொட்டியத்திற்கும் இடையே உள்ள மயிலக்காடு அருகே உள்ளது. இந்தப் பழமையான கோயிலில், சிவபெருமான் ஒரு ஆலமரத்தடியில் உள்ளார். பல நூற்றாண்டு காலவரலாற்றைக் கொண்ட இக்கோயிலின் திருவிழா கொல்லம் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டதாகும்.

உச்சர விழா தொகு

கேரளாவில் குறிப்பாக கொல்லம் மாவட்டத்தில் உச்சர திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.

ஓணத்தின் பாதியான மகரம் 28 அன்று உச்சர விழாவாகக் கருதப்படுகிறது. கோயிலில் இது ஒரு பாரம்பரிய விழாவாகும். திருமுடி எழுநல்லாத் என்பதானது விழாவின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இவ்விழாவின்போது கோயில் பூசாரி விலையுயர்ந்த தொப்பியை தலையில் அணிந்துகொண்டு, பெரிங்காபுரத்தில் வெறுங்காலுடன் நடந்து வருவார்.

அமைவிடம் தொகு

மைலக்காடு, இத்திக்கரை வழியாக இக்கோயிலை அடையலாம். அருகிலுள்ள ரயில் நிலையங்கள் கொல்லம் சந்திப்பு ரயில் நிலையம், பரவூர் ரயில் நிலையம் ஆகியவையாகும். கடல் மட்டத்திலிருந்து 31.33 மீ என்ற புவியியல் ஆயங்களுடன் இந்த கோயில் அமைந்துள்ளது

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Thiru Aarattu Madannada" (in ஆங்கிலம்). 2020-04-25. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  2. "Thiru Aarattu Madannada Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.

வெளி இணைப்புகள் தொகு