திரேசுவர் கலிதா

இந்திய அரசியல்வாதி

திரேசுவர் கலிதா (Dhireswar Kalita) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியன்று எசு. ஆர். கைதா என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். அசாம் மாநில அரசியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார்.[1] 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை கவுகாத்தி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார் [2] கிரண் குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

திரேசுவர் கலிதா இதற்கு முன்பு 1943 ஆம் ஆண்டு வரை காங்கிரசு கட்சியில் ஒரு மாணவராக இணைந்திருந்தார். மேலும் இவர் கவுகாத்தி உள்ளாட்சி வாரிய உறுப்பினராக இருந்தார். ஆறு ஆண்டுகள் கவுகாத்தி பல்கலைக்கழக நீதிமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். மாணவர் கூட்டமைப்பு தன்னார்வலராக 1941 ஆம் ஆண்டில் பாண்டுவில் உள்ள பர்மா அகதிகள் முகாம்களிலும், கவுகாத்தியிலும் பணியாற்றினார். வங்காளப் பஞ்சத்தின் போது, 1943 ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை கவுகாத்தியில் ஆதரவற்றோர் இல்லத்தை நிர்வகித்தார்.

திரேசுவர் கலிதா தனது 74 ஆவது வயதில் 1997 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று கவுகாத்தியில் இறந்தார் [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
  2. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
  3. Com. Dhireswar Kalita passes away. Trade Union Record. 1997. பக். 15. https://books.google.com/books?id=p2ztAAAAMAAJ&q=%22Dhireswar+Kalita%22+%22assam%22+%22passed%22. பார்த்த நாள்: 23 July 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேசுவர்_கலிதா&oldid=3851087" இலிருந்து மீள்விக்கப்பட்டது