திலீப் குமார் கங்குலி

இந்திய நரம்பியல் நிபுணர் மற்றும் எழுத்தாளர்

திலீப் குமார் கங்குலி (Dilip Kumar Ganguly) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நரம்பியல் மற்றும் நரம்பியல் மருந்தியல் நிபுணர் ஆவார். [1] மருந்தியல் மற்றும் பரிசோதனை சிகிச்சைத் துறையின் தலைவராக இருந்தார். இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். [2] இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் 4 ஜனவரி 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பார்கின்சோனிசம் [3] மற்றும் இந்தியாவில் நரம்பியல் மருந்தியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நன்கு அறியப்பட்டார். [4] இவரது ஆராய்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் பல கட்டுரைகளின் வழியாக இந்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். [5] [6] தவிர, இவர் பிறரால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கும் சில அத்தியாயங்களை பங்களித்துள்ளார் [7] இவரது பணிகள் பல ஆராய்ச்சியாளர்களாலும் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திய நரம்பியல் அகாடமியின் நிறுவனரான திலீப் குமார் கங்குலி அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [8] அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்திய அரசாங்கத்தின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் , மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசை 1985 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கியது [9]

திலீப் குமார் கங்குலி
D. K. Ganguly
பிறப்புசனவரி 4, 1940 (1940-01-04) (அகவை 84)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
துறை
  • நரமியல் நிபுணர்
  • நரம்பியல் மருந்தியல் நிபுணர்
பணியிடங்கள்
அறியப்படுவதுStudies on Parkinsonism
விருதுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Shrikant Mishra, Bhavesh Trikamji, Sandeep Singh, Parampreet Singh, Rajasekharan Nair (2013). "Historical perspective of Indian neurology". Ann Indian Acad Neurol 16 (4): 467–477. doi:10.4103/0972-2327.120422. பப்மெட்:24339562. 
  2. "Dogs freed from lab". The Telegraph. 2017. Archived from the original on 28 February 2017.
  3. "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2017.
  4. P. N. Tandon (2017). "Neuorosciences, an Overview" (PDF). Indian Academy of Neurosciences.
  5. "On ResearchGate". 2017.
  6. Please see Selected bibliography section
  7. Alexander Storch; Michael A. Collins (6 December 2012). Neurotoxic Factors in Parkinson's Disease and Related Disorders. Springer Science & Business Media. pp. 322–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4615-1269-1.
  8. "Indian Academy of Neurosciences fellows". Indian Academy of Neurosciences. 2017.
  9. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.

புற இணைப்புகள்

தொகு
  • "On PubMed". List of articles. US National Library of Medicine. 2016.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_குமார்_கங்குலி&oldid=4053283" இலிருந்து மீள்விக்கப்பட்டது