திலீப் சாங்கவி

திலீப் சாங்கவி (Dilip Shanghvi) (பிறப்பு: அக்டோபர் 1, 1955) என்பவர் இந்தியத் தொழிலதிபரும், சன் ஃபார்மாசிட்டிகல்ஸ் நிறுவன தலைவரும் ஆவார்.[2] இந்திய அரசு இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை 2016ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது.[3] இந்தியா டுடே பத்திரிகை 2017 பட்டியலில் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கலில் இவருக்கு 8 வது இடம் கிடைத்தது.[4]

திலீப் சாங்கவி
பிறப்பு1 அக்டோபர் 1955 (1955-10-01) (அகவை 68)
அம்ரேலி, குசராத்து, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிசன் ஃபார்மாசிட்டிகல்ஸ் நிறுவன தலைவர்
சொத்து மதிப்புUS$12 பில்லியன் (சூன் 2021)[1]
வாழ்க்கைத்
துணை
விபா சாங்கவி
பிள்ளைகள்2
விருதுகள்பத்மஸ்ரீ (2016)

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி , ஜூலை 2021 நிலவரப்படி, சாங்க்வி 11 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 9 வது பணக்காரர் ஆவார்.[சான்று தேவை]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சாங்கவி சமண குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள அம்ரேலி என்ற சிறிய நகரத்தில் சாந்திலால் சாங்கவி மற்றும் குமுத் சாங்கவிக்கு மகனாகப் பிறந்தார். சாங்கவி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் தனது குழந்தைப் பருவத்தையும் கல்லூரி வாழ்க்கையையும் தனது பெற்றோருடன் கல்கத்தாவின் புர்ராபஜார் வட்டாரத்தில் கழித்தார். இவர் ஜே. ஜே. அஜ்மேரா உயர்நிலைப் பள்ளி மற்றும் பவானிபூர் கல்விச் சங்கக் கல்லூரியின் பழைய மாணவர் இவர், அங்கு இவர் முறையே பள்ளிப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பைச் முடித்தார்.[5][6]

தொழில் தொகு

கொல்கத்தாவில் தனது மொத்த பொதுவான மருந்து வணிகத்தில் தனது தந்தைக்கு உதவுவதன் மூலம் தொடங்கினார். இந்த வேலையின் போது தான் மற்றவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு பதிலாக தனது சொந்த மருந்துகளை தயாரிக்க நினைத்தார். இசுரேலைச் சார்ந்த தாரோ பார்வினை 2007இல் தன்னகப்படுத்தியப் போது, அதன் தலைமைப் பொறுப்பினை ஏற்காமல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இஸ்ரேல் மாகோவைத் தேர்வு செய்தார். 

சமூகம் தொகு

ஜனவரி 2018 இல், இந்திய அரசாங்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் 21 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய வாரியக் குழுவிற்கு சங்கவியை நியமித்தது.[7] இவர் ஐ.ஐ.டி பம்பாயில் ஆளுநர் குழுவின் தலைவராக உள்ளார். இவர் 2017 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் உதவித்தொகை திட்டத்தின் அறங்காவலராக நியமிக்கப்பட்டார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் விபா ஷாங்க்வியை மணந்தார்.  இவர்களுக்கு ஒரு மகன், ஆலோக் மற்றும் ஒரு மகள், விதி, இருவரும் சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.[9]

புத்தகம் தொகு

2019 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர் சோமா தாஸ் திலீப் ஷாங்க்வியின்[10] முதல் மற்றும் ஒரே சுயசரிதை தி ரிலெக்டன்ட் பில்லியனரை எழுதினார் .  பெங்குயின் ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நவம்பர் 2019 இல் சிறந்த வணிக புத்தக பிரிவில் டாடா இலக்கிய விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டது.[11]

மேற்கோள்கள் தொகு

  1. "Dilip Shanghvi". Forbes. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  2. "Bloomberg Billionaires: today's ranking of the world's richest people: Dilip Shanghvi". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  3. "Padma Awards 2016". Press Information Bureau, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் February 2, 2016.
  4. "50 power people". இந்தியா டுடே. April 14, 2017. http://indiatoday.intoday.in/story/india-today-top-50-powerful-indians-mukesh-ambani-ratan-tata-kumar-mangalam-birla-gautam-adani-anand-mahindra-srk-amitabh-bacchan/1/928939.html. 
  5. BBC 7 April 2014 Sun Pharmaceutical to acquire Ranbaxy in $4bn deal
  6. Eric Palmer for FiercePharma Mar 26, 2015 Deal done, Sun Pharma must now fix Ranbaxy's deep problems
  7. "HRD ministry finalises Sun Pharma head as IIT-Bombay chairman". Hindustan Times. 19 March 2016. https://www.hindustantimes.com/education/hrd-ministry-finalises-sun-pharma-head-dilip-shanghvi-as-iit-bombay-chairman/story-80pzxxztQz4e9BESJpucZJ.html. 
  8. "Rhodes House - Home of The Rhodes Scholarships". Rhodes House - Home of The Rhodes Scholarships (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-01.
  9. "Sun rises on Ranbaxy". India Today. 18 April 2014. http://indiatoday.intoday.in/story/dilip-shanghvi-ceo-sun-pharma-ranbaxy-laboratories/1/356394.html. 
  10. "PENGUIN TO PUBLISH THE FIRST EVER BIOGRAPHY OF SUN PHARMA FOUNDER DILIP SHANGHVI". Penguin India.
  11. "Biography of 'Medicine Mogul' Dilip Shanghvi, the founder of Sun Pharma, to hit stores soon". cnbctv18.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_சாங்கவி&oldid=3203577" இலிருந்து மீள்விக்கப்பட்டது