தில்சுக்நகர்
தில்சுக்நகர் (Dilsukhnagar) ஐதராபாத்து நகரின் பெரிய வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவையின் பகுதியாக இது உள்ளது. இங்குள்ள கத்தியன்னரம் பழச்சந்தை மாநிலத்தின் முதன்மை பழச்சந்தையாக உள்ளது.
தில்சுக்நகர் | |
---|---|
சுற்றுப்புறப் பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | ஐதராபாத்து |
பெருநகர்ப் பகுதி | ஐதராபாத்து |
அரசு | |
• நிர்வாகம் | ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவை (GHMC) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
PIN | 500 060 |
மக்களவைத் தொகுதி | ஐதராபாத்து |
சட்டப் பேரவைத் தொகுதி | எல். பி. நகர் |
நகர்புற திட்டங்கள் | ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவை (GHMC) |
வரலாறு
தொகுஇப்பகுதி விவசாய நிலமாக தில்சுக் ராம் பெர்சத் என்பவருக்கு உடைமையாக இருந்தது. அவர் இதனை வீட்டுமனைகளாகப் பிரித்து தில்சுக்நகர் என்ற குடியிருப்பு நகரை உருவாக்கினார். துவக்கத்தில் இது குடியிருப்பு வீடுகளை மட்டுமே கொண்டிருந்தது; கடந்த பத்தாண்டுகளில் வலுவான பொருளியல் வளர்ச்சி இப்பகுதியை முதன்மையான வணிக மையமாக மாற்றியுள்ளது.
பெப்ரவரி 21,2013, இரவில் இங்குள்ள திரையரங்குக்களுக்கு வெளியே இரு தொடர் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.[1] [2] [3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ http://www.ndtv.com/article/south/hyderabad-blasts-alleged-indian-mujahideen-operative-surveyed-area-of-blast-in-2012-says-report-334015
- ↑ "Five explosions kill 23 in Hyderabad, 50 injured". First Post. பார்க்கப்பட்ட நாள் 21 February 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-24.