தில்லியின் இரும்புத்தூண்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தில்லி இரும்புத் தூண் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
டெல்லியிலுள்ள இரும்புத்தூண் உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் மற்றும் உலோகவியல் ஆய்வாளர்களின் கவனத்தை பல ஆண்டுகளாக ஈர்த்துள்ளது.ஏனெனில் இத்தூணின் அற்புத அமைப்பானது கடுமையான வானிலைகளால் அரிக்கப்படாமல் 1600 ஆண்டுகளாக நிலைத்து நிற்க கூடியதாக உள்ளது .பண்டைய இந்திய கொல்லர்களால் தூய இரும்பினைக் கொண்டு இத்தூண் வடிவமைக்கப் பட்டுள்ளது.இதில் 98 சதவீதம் தூய இரும்பு உள்ளது. மேலும் இது 23 அடி 8 அங்குலம் உயரமும் 16 அங்குலம் விட்டமும் கொண்டது.
1600 வயதுடைய இவ்விரும்புத்தூணில் உள்ள மர்மம் ஐ ஐ டி கான்பூர் (இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி) உலோகவியல் நிபுணர்களால் 2002ஆம் ஆண்டு தீர்க்கப்பட்டது .இவர்கள் இதுத்தூணில் மிசவேட் என்ற இரும்பு கலவையிலான மெல்லிய அடுக்கு உள்ளதை கண்டறிந்தனர் .மேலும் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் இரும்பை துருவிலிருந்து பாதுகாக்கிறது. இந்த பாதுகாப்பு அடுக்கானது தூண் எழுப்ப துவங்கிய மூன்றாண்டுகளில் இருந்து 1600 ஆண்டுகளில் ஒன்றிற்கு இருபது மில்லிமீட்டராக வளர்ந்துள்ளது.இதில் உள்ள உயர் அளவு பாஸ்பரஸ் நல்ல வினையூக்கியாக செயல்படுகிறது. இரும்பு உருவாக்கும் முறைகளில் இது தனிப்பட்ட முறையாக கருதப்படுகிறது.பயிற்சி பெற்ற பண்டைய கால இந்திய கொல்லர்களால் இரும்பு எஃகு மற்றும் கரியினைக் கொண்டு நவீன ஊதுளைகளில் உற்பத்தி செய்த கலவையினை கொண்டு வடிவமைத்துள்ளனர். பின்பு சுண்ணாம்பு மற்றும் கரி இவற்றில் உள்ள கசடு ,ஈயம் போன்ற உலோகம் இவற்றின் மூலம் தூண் மூடப்பட்டு உள்ளது. இதில் உள்ள கசடில் இருந்து பாஸ்பரஸ் மிகுதியாக பெறப்படுகிறது.இத்தூண் 7மீ உயரம் மற்றும் 6டன் எடை கொண்டதாக உள்ளது.வட இந்தியாவை ஆட்சி செய்த குப்தர்களின் (கி.பி 320-கி.பி 540) வம்சாவளி வந்த சந்திரகுப்த இரண்டாம் விக்ரமாதித்தன் என்பவரால் கி.பி(375-414)ல் கட்டப்பட்டது.