தில்லி பள்ளிக் கல்வி வாரியம்
தில்லி பள்ளிக் கல்வி வாரியம் (Delhi Board of School Education) இந்தியாவின் தில்லி நகரத்தில் இயங்கும் மாநில அளவிலான கல்வி வாரியமாகும்.[2] தில்லி முதல்வர் அரவிந்த் கெச்ரிவால் 2021 ஆம் ஆண்டு இவ்வாரியத்தை நிறுவினார். தற்போது தில்லியில் 32 பள்ளிகள் தில்லி பள்ளிக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு துறைகளில் கல்வியை வழங்குகின்றன. அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம் பிரிவுக்கு 12 பள்ளிகள், மனிதநேயத்திற்கு 7 பள்ளிகள், நிகழ்ச்சி மற்றும் காட்சி கலைகள் பிரிவுக்கு 4 பள்ளிகள், உயர்நிலை 21 ஆம் நூற்றாண்டு திறன்கள் மேம்பாட்டுக்காக 7 பள்ளி மற்றும் ஆயுதப் படைகள் தயாரிப்பு பள்ளி 1 பள்ளி என இவை செயல்படுகின்றன.
தில்லி பள்ளிக் கல்வி வாரியம் | |
சுருக்கம் | தி.ப.க.வா |
---|---|
உருவாக்கம் | 2021 மார்ச்சு 06 |
நிறுவனர் | தில்லி தேசிய தலைநகர் ஒன்றியப் பிரதேச அரசு |
நிறுவப்பட்ட இடம் | தில்லி |
வகை | அரசு கல்வி வாரியம் |
சட்ட நிலை | மாநில வாரியம் |
தலைமையகம் | ஐ.பி. விரிவு, பத்பர்கஞ்சு, தில்லி- 110092 |
தலைமையகம் |
|
உரிமையாளர் | தில்லி தேசிய தலைநகர் ஒன்றியப் பிரதேச அரசு |
கல்வித்துறை இயக்குநர் | இமான்சு குப்தா |
வரவு செலவு திட்டம் | 620 மில்லியன்[1] |
வலைத்தளம் | http://dbse.in/ |
வரலாறு
தொகுதில்லி பள்ளிக் கல்வி வாரியம் 6 மார்ச் 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் நாளன்று தில்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்டது.[3] ஆகத்து மாதம் 11 ஆம் தேதியன்று பன்னாட்டு இளங்கலை கல்வித்திட்ட அமைப்புடன் தில்லி அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[4][5] ஆகத்து மாதம் 13 அன்று தில்லி பள்ளிக் கல்வி வாரியம் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் தில்லி பள்ளிக் கல்வி வாரியத்தின் தேர்வுகளை நடத்தவும் சான்றிதழை வழங்கவும் அனுமதிக்கிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delhi Board of School Education".
- ↑ "Delhi's own school education board DBSE registered, notification detailing modalities soon, says report". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
- ↑ "30 govt schools in Delhi to come under newly formed education board from 2021-22 session". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-27. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
- ↑ "Delhi govt signs MoU with IB board for Delhi Board of School Education". www.livemint.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
- ↑ "Delhi Board of School Education: Delhi govt signs MoU with IB Board to pave way for students". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
- ↑ "COBSE grants membership to Delhi Board of School Education - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.