தில்லை (மலர்)

தாவர இனங்கள்
தில்லை
Excoecaria agallocha in Krishna Wildlife Sanctuary, Andhra Pradesh, இந்தியா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
E. agallocha
இருசொற் பெயரீடு
Excoecaria agallocha
L
தில்லை மலரின் தோற்றம்

தில்லை என்பது ஒரு மரம்.

ஊர்
சிதம்பரம் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் ‘தில்லை’. தில்லை மரம் மிகுதியாக இருந்த ஊர் தில்லை. தில்லை மரம் அதிகமாக இருந்ததால் தில்லைவனம் என்றழைக்கப்பட்ட ஊர் தில்லைவிளாகம்(முத்துப்பேட்டை அருகே) என்று மருவியது.
கோயில் மரம்
தில்லையில் உள்ள சிவன் கோயிலின் காப்புமரம் (தலவிருட்சம்) தில்லை. மற்றும் ஆலமரமும் இதன் காப்புமரம்.
இந்தத் தில்லைமரம் இப்போது சிதம்பரத்தில் இல்லை. என்றாலும் சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் உப்பங்கழிகளில் இன்றும் மிகுதியாக உள்ளன.
இடைச்சொல்
தில்லை இடைச்சொல் தொல்காப்பியம் தமிழிலுள்ள தில்லை என்னும் சொல்லைக் குறிப்பிடுகிறது.[1]
தில்லை மரம் பற்றிச் சங்கப்பாடல் தரும் செய்திகள்
  • குறிஞ்சிநிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் தில்லை மலரும் ஒன்று. இது மணம் வீசும் மலர். இதன் மரம் 'தளதள'வெனத் தழைத்திருக்கும். பெரிதாக இருக்கும்.[2]
  • நீர்நாயின் குருளை (குட்டி) மீனை மேய்ந்தபின் தில்லையம் பொதும்பில் (ஆற்றோரக் காடுகளில்) பள்ளி கொள்ளுமாம்.[3]
  • தில்லை மரங்கள் ஊருக்கு வேலியாக அமைவது உண்டு.[4]
  • உப்பங்கழிகளில் முண்டகமும் தில்லையும் ஓங்கி வளரும்.[5]
  • தில்லைக் காய்கள் முனிவர்களின் சடைமுடி தொங்குவது போலக் காய்த்துக் குலுங்கும். புது வெள்ளம் கொட்டும் அருவியில் குளித்துக் குளித்து அவர்களின் தலைமுடி சடை போட்டுவிடுமாம்.[6]

இவற்றையும் காண்க

தொகு
சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

தொகு
  1. சொல்லதிகாரம் 260
  2. கடிகமழ் கலிமாத் தில்லை - குறிஞ்சிப்பாட்டு 77
  3. நற்றிணை 195
  4. தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131
  5. <poem> மாமலர் முண்டகம் தில்லையொடு ஒருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர் – கலித்தொகை 133
  6. <poem>கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லை_(மலர்)&oldid=3420006" இலிருந்து மீள்விக்கப்பட்டது