தில்வார் கான்
வங்காளதேச கவிஞர்
தில்வார் கான் (Dilwar Khan) வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். 1937 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். கோனோ மனுசர் கோபி என்றழைக்கப்படும் மக்கள் கவிஞராக அறியப்படும் தில்வார் கானுக்கு 1980 ஆம் ஆண்டு வங்காளதேச அகாடமியின் இலக்கிய விருது வழங்கப்பட்டது.[1] 2008 ஆம் ஆண்டு இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதான எகுசே பதக்கத்தையும் வங்காள தேச அரசாங்கம் இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[2]
தில்வார் கான் Dilwar Khan | |
---|---|
দিলওয়ার | |
முதல் மனைவி அனிதா காதுனுடன் தில்வார் | |
தாய்மொழியில் பெயர் | দিলওয়ার |
பிறப்பு | தெற்கு சுர்மா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (வங்காளதேசம்) | 1 சனவரி 1937
இறப்பு | 10 அக்டோபர் 2013 | (அகவை 76)
தேசியம் | வங்காளதேசம்i |
விருதுகள் |
|
பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியான வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களில் ஒன்றான சில்கெட்டு மாவட்டம் தெற்கு சுர்மாவில் உள்ள பார்தோகோலாவில் தில்வார் கான் பிறந்தார். 1981 ஆம் ஆண்டு இவருக்கு வங்காளதேச அகாடமியின் உறுப்பினர் தகுதி கிடைத்தது. 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று தில்வார் கான் காலமானார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hafez Ahmed (11 October 2013). "Poet Dilwar Khan". Daily Sun. Archived from the original on 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 8 April 2014.
- ↑ "9 get Ekushey Padak 2008". The Daily Star: Internet Edition. 19 February 2008. பார்க்கப்பட்ட நாள் 27 October 2010.