திவான் சாலை, மைசூர்

திவான் சாலை (Dewan's Road ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலமான மைசூர் நகரத்தில் உள்ள ஒரு முக்கியமான பிரதான வீதியாகும்.

சாமுண்டி விருந்தினர் மாளிகை
வரலாற்று அல்லாமா சத்திரம்
சுதந்திரப் பூங்கா

அமைவிடம்

தொகு

நகர மையத்தின் மேற்குப் பகுதியில் திவான் சாலை அமைந்துள்ளது. தேவராஜ் அர்சு சாலை, வினோபா சாலை மற்றும் சாமராசா இரட்டை சாலை போன்ற பிற முக்கிய சாலைகள் இதனுடன் இணைகின்றன. [1] [2] சப்னா புத்தகக் கடைக்கு அருகிலுள்ள செல்லுவாம்ப்ரா மருத்துவமனையின் பின்புறத்திலிருந்து திவான் சாலை தொடங்குகிறது. இது சுதந்திர பூங்காவின் மேற்குப் பகுதியைக் கடந்து வட்டார போக்குவரத்து அலுவலக வட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு அருகில் முடிவடைகிறது.

நீளம்

தொகு

திவான் சாலை சுமார் 1.55 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இரம்யா மகேந்திர உணவகம், சுபம் திவான் அடுக்குமாடி குடியிருப்புகள், டாடா கார் சேவை மற்றும் பாரத் சுற்றுலாச் சேவை போன்ற அடையாளங்கள் திவான் சாலையில் இருக்கிறது.

வரலாறு

தொகு

திவான் சாலையின் தோற்றம் மைசூர் மன்னரின் காலத்திற்கு முந்தையது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த வரலாற்றுச் சாலை சிலரால் புறக்கணிக்கப்பட்டு பழுதுபார்க்கப் படாமல் சுகாதாரமற்றதாக மாறியது. புகழ்பெற்ற நபர்களின் ஓவியங்கள் மற்றும் ஓவியங்களுடன் 2016 ஆம் ஆண்டில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. CAVA (சாமராசேந்திர மெய்நிகர் கலை அகாடமியின் கலைஞர்கள் இந்த மாற்றத்திற்கு பங்களித்தனர். ஒரு கோபுர கடிகாரமும் இங்கு நிறுவப்பட்டது. [3]

அஞ்சல் அலுவலகம்

தொகு

தேவராசா மொகல்லா அஞ்சல் நிலையத்தின் கீழ் வருவதால், திவான் சாலையின் குறியீட்டு எண் 570001 ஆகும். [4]

மேலும் காண்க

தொகு

படத் தொகுப்பு

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Dewans Road - Mysuru". wikimapia.org.
  2. "Google Maps". Google Maps.
  3. "A colourful upgrade for Dewan's Road". 15 July 2016 – via www.thehindu.com.
  4. "What is the pincode of Dewans Road Devaraj Urs Road Mysore ?". www.pincodebox.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவான்_சாலை,_மைசூர்&oldid=2994284" இலிருந்து மீள்விக்கப்பட்டது