திவ்யா நாகேஷ்
திவ்யா நாகேஷ் என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2009 இல் வெளியான அருந்ததி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
திவ்யா நாகேஷ் | |
---|---|
பிறப்பு | 22 மே 1991[1] |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009– தற்போது |
கல்வி
தொகுதிவ்யா மும்பையில் பிறந்தவர். இவருடைய குடும்பம் சென்னையில் குடியேறியமையால் கல்வியை சென்னையில் கற்றார். சென்னை செயின்ட் ஜோசப் பள்ளியிலும், திருச்சி ஹோலி க்ராஸ் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார்.
திரையுலகம்
தொகுதிவ்யா பள்ளி படிக்கும் காலத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்நியன், அது ஒரு கனா காலம், ஜில்லுன்னு ஒரு காதல், பொய் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் அந்நியன் திரைப்படத்தில் இளம்வயது விக்ரமின் தங்கையாக நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் பள்ளி செல்லும் பொழுது தேங்கிய நீரில் மின்சாரம் பாய்வது தெரியாமல் விழுந்து இறப்பது என்ற காட்சியில் நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் கவனம் பெற்றார்.
விருதுகள்
தொகுசிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருது - 2009 - அருந்ததி திரைப்படத்திற்காக.[2]
திரைப்படங்கள்
தொகு- குழந்தை நட்சத்திரமாக
- நாயகியாக
- மதிகெட்டான் சாலை - 2011
- பாசக்கார நண்பர்கள் -2011
- இறுதியாக தேடினேன்
- வஸ்தவம் (தெலுங்குத் திரைப்படம்)
- புவனக்காடு 2013
- மேற்கு முகப்பேர் கனகதுர்கா - 2016