தி அயில்
தி அயில் 2000 ல் வெளிவந்த தென் கொரிய திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார். இது கிம் கி-டக்கின் ஐந்தாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சு ஜங், கிம் யு-சியோக் ஆகியோர் நடித்திருந்தனர்.
தி அயில் | |
---|---|
இயக்கம் | கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்) |
தயாரிப்பு | லீ இண் |
கதை | கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்) |
நடிப்பு | சு ஜங் கிம் யு-சியோக் |
கலையகம் | மையுங் பிலிம்ஸ் |
விநியோகம் | சிஜெ எண்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | ஏப்ரல் 22, 2000 |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
ஆக்கச்செலவு | ஐஅ$1 million[1] |
மொத்த வருவாய் | ஐஅ$20,666[2] |
கதைச் சுருக்கம்
தொகுஏரியில் மிதக்கும் சிறிய வீடுகளில் தங்க வருகின்றவர்களைப் படகில் அழைத்து செல்வதையும், அவர்களுக்கு உணவு தருவதையும் தொழிலாகக் கொண்ட கதாநாயகி, எப்போதுமே தனிமையில் இருக்கிறாள். இரு கொலைகளைச் செய்து காவல்துறைக்கு பயந்து அங்கு தங்க வருகின்ற ஒருவனிடம் அவளுக்கு காதல் உண்டாகிறது. அக்காதலுக்காக இரு கொலைகளை செய்யும் அவள். இறுதியில் காதலனோடு அந்த சிறிய வீடொன்றுடன் யாருமில்லாத வெகுதூரத்திற்கு சென்றுவிடுகிறாள்.
விருதுகள்
தொகு- கோல்டன் ராவன் - கிம் கி-டக் - பிரசெல்சு சர்வதேச திரைப்பட விழா
- சிறந்த நடிகை -சு ஜங் - சினிமேன்லியா சர்வதேச திரைப்பட விழா
ஃபாண்டாஸ்போர்டோ மற்றும் வெனிஸ் திரைப்பட விழா ஆகியவற்றிலும் விருதுகளைப் பெற்றது இப்படம்.
சர்ச்சை
தொகுஇத்திரைப்படத்தில் மீன்கொக்கிகைளைக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயலும் இரு காட்சிகள் இடம்பெற்றன. அத்துடன் மீன், பறவை போன்ற விலங்களை கொல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் இத்திரைப்படத்தினை வன்முறை நிறைந்த படமாக விமர்சனம் செய்கின்றனர்.
வெளி இணைப்புகள்
தொகு- ↑ Korean Film Commission (2000). Korean Cinema 2000. p. 64.
- ↑ "koreanfilm". Boxofficemojo. Retrieved March 04, 2012.