கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)
கிம் கி டக் (ஆங்கில மொழி: Kim Ki-duk, 김기덕) (20 திசம்பர் 1960 – 11 திசம்பர் 2020) என்பவர் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
கிம் கி டக் | |
---|---|
பிறப்பு | போங்வா, தென் கொரியா | 20 திசம்பர் 1960
இறப்பு | 11 திசம்பர் 2020 ரீகா, லாத்வியா | (அகவை 59)
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1993–2020 |
இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. அவற்றில் சில விருதுகளையும் பெற்றுள்ளன. இயக்குனராக, தயாரிப்பாளராக கிம் கி-டக் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை, 69வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது 'பயட்டா' திரைப்படத்திற்காகவும், 61வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருது சிறந்த இயக்குனருக்காக 3-அயன் திரைப்படத்திற்காகவும், 54வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிலவர் பீர் விருது சிறந்த இயக்குனருக்காக சமாரியா திரைப்படத்திற்காகவும் கிடைத்தது. மேலும் 2011 கேன்ஸ் பட திருவிழாவில் 'அன் சர்டர்ன் ரிகாட் பரிசு அரிராங்' படத்திற்காகவும் கிடைத்தது.
வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுகிம் கி-டக் திசம்பர் 20, 1960 ல் தென் கொரியாவில் போங்குவா எனும் இடத்தில் பிறந்தார். பாரிசில் நுண்கலையை 1990 லிருந்து 1993 வரை படித்தார். அதன் பின்பு தென் கொரியாவிற்கு வந்து திரைகதையாசிரியாராகப் பணியாற்றினார். 1995ல் நாடகமெழுதும் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.[1] அதனைத் தொடர்ந்து குரோக்கோடைல் எனும் குறைந்த செலவினாலான படத்தை 1996ல் எடுத்தார். தென்கொரியாவில் இப்படம் உணர்ச்சிகரமான அதிர்வலையை ஏற்படுத்தியது. இவரது ரியன் பிரிக்சன் திரைப்படம் 23வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]
2004ல் இவருடைய இயக்குனர் திறமைக்கு இரு திரைப்பட விழாவிருதுகள் வேறுவேறு படங்களுக்காக கிடைத்தது. பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் இவரது 'சமாரிடன் கேள்' (2004) மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் 3-அயன் (2004) படங்களுக்கா விருது பெற்றார். 2011ல் இவரது ஆவணப்படமான 'அரிராங்' திரைப்படத்திற்கு அன் சர்டர்ன் ரிகாட்விருது கான் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. 2012 வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இவரது பயட்டா திரைப்படத்திற்கு கோல்டன் லயன் விருதும் கிடைத்தது. இது சர்வதேச மூன்று திரைப்பட விழாக்களான வெனிஸ், பெர்லின், கேன்ஸ் ஆகியவற்றில் சிறந்த திகில் படத்திற்கான விருது வாங்கிய பெருமை பெற்றது.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | கொரியன் தலைப்பு | மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பு |
---|---|---|---|
1996 | குரோக்கோடைல் | 악어 | Ageo |
வைல்ட் அனிமல்ஸ் | 야생동물 보호구역 | Yasaeng dongmul bohoguyeog | |
1998 | பேர்ட்கேஜ் இன் | 파란 대문 | Paran daemun |
2000 | தி அயில் | 섬 | Seom |
ரியல் பிரிக்சன் | 실제 상황 | Shilje sanghwang | |
2001 | அட்ரஸ் அன்னௌன் | 수취인불명 | Suchwiin bulmyeong |
பேட் கை | 나쁜 남자 | Nabbeun namja | |
2002 | தி கோஸ்ட் காட் | 해안선 | Haeanseon |
2003 | ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அன்ட் ஸ்பிரிங் | 봄 여름 가을 겨울 그리고 봄 | Bom yeoreum gaeul gyeoul geurigo bom |
2004 | சமாரிடன் கேர்ள் | 사마리아 | Samaria |
3-அயன் | 빈 집 | Bin-jip | |
2005 | தி பௌ | 활 | Hwal |
2006 | டைம் | 시간 | Shigan |
2007 | பிரத் | 숨 | Soom |
2008 | டிரீம் | 비몽 | Bimong |
2011 | அரிராங் | 아리랑 | Arirang |
அமென் | 아멘 | Ahmen | |
2012 | பயட்டா | 피에타 | Pieta |
2013 | மோபியஸ்[3] | 뫼비우스 | Moebius |
2014 | ஒன் ஆன் ஒன் | 일대일 | Il-dae-il |
2015 | ஸ்டாப் | 스톱 | Seutop |
2016 | நெட்[4] | 그물 | Geumul |
பிற செயல்பாடுகள்
தொகு- பியூட்டிப்புல் (2008, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
- ரப் கட் (2008, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
- சீக்ரெட் ரியூனியன் (2010, எழுத்தாளர்- மதிப்பிடப்படாத)
- பூங்சான் (2011, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
- ரப் பிளே (2013, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
- ரெட் பேமிலி (2013, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
- காட்சென்டு (2014, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
இறப்பு
தொகுஇவர் 11 திசம்பர் 2020 அன்று, தனது 60வது பிறந்தநாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு, லாட்வியாவில் கோவிட்-19 தொற்றுநோயின் போது 59 வயதில் கோவிட்-19ஆல் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார்.[5][6][7][8][9]
ஆதாரங்கள்
தொகு- ↑ "Profile of Kim Ki-deok" (in Korean). Cine21, The Hankyoreh. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "23rd Moscow International Film Festival (2001)". MIFF. Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-30.
- ↑ "Kim Ki-Duk's MOEBIUS Reportedly First Film Selected For Venice Competition". Archived from the original on 2013-06-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-05.
- ↑ "Lee Won-geun to star in Kim Ki-duk's "Net" with Ryoo Seung-beom". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-04-04.
- ↑ "현지 언론 "김기덕 감독, 라트비아서 코로나19로 사망"" [Local media "Director Ki-deok Kim dies of Corona 19 in Latvia"]. news.jtbc.joins.com (in கொரியன்). 11 December 2020. பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
- ↑ "South Korean filmmaker Kim Ki-duk dies from COVID-19 complications" (in en). Reuters. 11 December 2020. https://in.reuters.com/article/health-coronavirus-southkorea-filmmaker/south-korean-filmmaker-kim-ki-duk-dies-from-covid-19-complications-idINL4N2IR37H.
- ↑ Herald, The Korea (11 December 2020). "Movie director Kim Ki-duk dies of coronavirus". www.koreaherald.com.
- ↑ "Controversial South Korean director Kim Ki-duk dies of Covid aged 59" (in en). The Guardian. 11 December 2020. https://www.theguardian.com/film/2020/dec/11/south-korea-director-kim-ki-duk-dies-of-covid.
- ↑ Sang-Hun, Choe (17 December 2020). "Kim Ki-duk, Award-Winning South Korean Filmmaker, Dies at 59". The New York Times. https://www.nytimes.com/2020/12/17/movies/kim-ki-duk-dead.html.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kim Ki-duk
- Kim Ki-Duk: the past, the persistent problems and the near future பரணிடப்பட்டது 2012-06-27 at the வந்தவழி இயந்திரம் About Kim Ki-Duk's 2006 controversial declarations
- Review of Kim Ki-duk's Time பரணிடப்பட்டது 2012-04-28 at the வந்தவழி இயந்திரம்
- Working Biography