தி பௌ (திரைப்படம்)
தி பௌ (கொரியன் தலைப்பு: Hwal) 2005ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார். 2005 கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[2]
தி பௌ | |
---|---|
திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | கிம் கி-டக் |
தயாரிப்பு | கிம் கி-டக் |
கதை | கிம் கி-டக் |
நடிப்பு | ஹான் யோ-ரிம் ஜியோன் சியோங்-ஹவாங் சியோ ஜி-சியோக் |
கலையகம் | கிம் கி-டக் பிலிம்ஸ் |
வெளியீடு | மே 12, 2005 |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
மொத்த வருவாய் | $2,021,070[1] |
கடலின் நடுவே மீன்பிடி படகில் வசித்துவரும் 60 வயது முதியவர், 16 வயதான பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். அவளுக்கு 17 வயதாகியதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார். இடையே மீன்பிடிக்க வருகின்ற இளைஞன் ஒருவனுடன் அவளுக்கு காதல் உண்டாகிறது. இவர்கள் மூவருக்கும் இடையான சம்பவங்களை இப்படம் விவரிக்கிறது.
நடிகர்கள்
தொகு- ஹான் யோ-ரிம் ... இளம் பெண்
- ஜியோன் சியோங்-ஹவாங் ... முதியவர்
- சியோ ஜி-சியோக் ... இளைஞன்
==ஆதாரங்க ==
- ↑ "Hwal". Boxofficemojo. Retrieved March 04, 2012.
- ↑ "Festival de Cannes: The Bow". festival-cannes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-12-08.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Bow
- ஹன்சினிமாThe Bow