டைம் (2006 திரைப்படம்)
டைம் 2006ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் இயக்கியிருந்தார். சூலை 30, 2006 ல் கர்லோவி வரி சர்வதேச திரைப்பட விழாவில் பங்குப்பெற்றது இப்படம்.
டைம் | |
---|---|
இயக்கம் | கிம் கி-டக் |
கதை | கிம் கி-டக் |
நடிப்பு | ஹா ஜங்-வூ சங் ஹியுன்-ஹா |
விநியோகம் | ஹேப்பிநெட் பிச்சர்ஸ் கொரியா |
வெளியீடு | சூன் 30, 2006 |
ஓட்டம் | 97 நிமிடங்கள் |
நாடு | ஜப்பான் தென் கொரியா |
மொழி | கொரியன் |
ஆக்கச்செலவு | $1,000,000 |
மொத்த வருவாய் | ஐஅ$721,712[1] |
கதைச் சுருக்கம்
தொகுகாதலன் தன்னை விட சிறந்த அழகுடைய பெண்களை விரும்புகிறான் என்று தவறாக எண்ணி, தன்னுடை முகம் மற்றும் உடலின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் காதலியின் மிகையான அன்பினை இப்படம் கதைகளமாக கொண்டது. தோற்றம் மாறிய பிறகான காதலர்கள் வாழ்வை நெகிழ்வுடன் கூறும் படம்.
கதை
தொகுசே-ஹீ மற்றும் ஜி- வூ இருவரும் இரு வருடங்களாக ஒன்றாக வாழ்பவர்கள். ஜி-வூ தன்னுடைய காதலன் தன்னைவிடச் சிறந்த தோற்றமுடைய பெண்களிடம் காதல் வயப்பட்டு, தன்னை பிரிந்து சென்றுவிடுவானோ என்று அஞ்சுகிறாள். வேறு பெண்ணுடன் அவன் பேசுகையில் பொறாமை குணம் கொண்டு அவர்களை திட்டுகிறாள். அவளின் செய்கைகளை கண்டு சே-ஹீ மனம் வருந்துகிறான்.
தினம் தினம் ஒரே தோற்றத்துடன் இருப்பதால் தன் காதலன் சே-ஹீவுக்கு சலித்துப் போய்விட்டதாக அவள் நம்புகிறாள். இதனால் அவனுடன் புணருகையில் தன்னை வேறு பெண்ணாக நினைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறாள். இதற்கிடையே அழகுக்கான அறுவை சிகிச்சை நிறுவனத்தின் விளம்பரத்தினை காண்கிறாள். தன் காதலிடம் எதுவும் கூறாமல் அவள் அறையை காலிசெய்துவிடுகிறாள். சே-ஹீ அவளை காணாது, அவள் இருப்பிடம் வருகிறான். அங்கும் அவள் இல்லாததை கண்டு வருந்துகிறான். அவனுடைய காதலிக்காக இவர்கள் எப்போதும் சந்திக்கின்ற தேநீர் விடுதியில் தினம் காத்திருக்கிறான்.
அங்கு வேலைசெய்யும் பெண்ணொருத்தி இவன் மீது ஈடுபாடு காண்பிக்கின்றாள். ஒரு கட்டத்தில் இருவரும் அறிமுகமாகி, காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவளுடைய சிறுவயது புகைப்படத்தினை காண சே-ஹீ விரும்பினாலும், அவ்வாறான படம் தன்னிடம் இல்லையென அவள் கூறுகிறாள். தன்னுடைய பழைய காதலியான ஜி-வூவை அவன் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அப்பெண் உணருகிறாள். இப்போது ஜி-வூ வந்தால் அவளை ஏற்றுக் கொள்வாயா என்று வினவுகிறாள். அவன் அவளையே நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறான். அப்போது தானே ஜி-வூ எனவும், அவனுக்காக கடுமையான அழகு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதையும் கூறுகிறாள். காதலன் அதிர்ச்சியடைகிறான்.
தன்னுடைய பழைய காதலியின் புதிய தோற்றத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை அனுகி தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்கிறான். அதன் பின் ஜி-வூவால் அவனை கண்டறிய முடியவில்லை. அவன் தன் வாழ்விலிருந்து தொலைந்துபோனதை அறிந்து மீண்டும் ஜி-வூ அறுவை சிகிச்சை செய்து தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்கிறாள்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Time (2007)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 4 March 2012.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Time
- ஹன்சினிமாTime
- Film review at the Korea Society Film Journal பரணிடப்பட்டது 2012-04-28 at the வந்தவழி இயந்திரம்
- Essay on Kim Ki-duk at The Korea Society Film Journal பரணிடப்பட்டது 2012-06-27 at the வந்தவழி இயந்திரம்
- டைம் (கொரிய திரைப்படம் 2006) - கிருஷ்ணன் சந்திரசேகரன் - தமிழ்இந்து தளம்