சமாரிடன் கேர்ள்

சமாரிடன் கேர்ள் (அங்குல்사마리아; இலத்தீன்Samaria) 2004ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார்.[2]

சமாரிடன் கேர்ள்
இயக்கம்கிம் கி-டக்
தயாரிப்புகிம் கி-டக்
பியே ஜியோங்-மின்
கதைகிம் கி-டக்
இசைபார்க் ஜி-வூங்
நடிப்புகேவக் ஜி-மின் ஹான் யோ-ரிம்
படத்தொகுப்புகிம் கி-டக்
வெளியீடுமார்ச்சு 5, 2004 (2004-03-05)
ஓட்டம்97 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
மொத்த வருவாய்ஐஅ$328,161[1]

ஐரோப்பாவிற்கு செல்ல ஆசைப்படும் இரு பெண்கள் யோ-ஜின் மற்றும் ஜே-யியோங். இவர்கள் அதற்காக பணம் சேர்க்க பால்வினைத் தொழிலில் ஈடுபட முடிவெடுக்கிறார்கள். யோ-ஜின் அதற்காக நபர்களை தேடிக் கண்டுபிடிக்கவும், காவல் அதிகாரிகள் வருவதை கண்காணிக்கவும் செய்கிறாள். ஜே-யியோங் பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள். கிடைக்கும் பணத்தினை யோ-ஜின் சேமித்து வைக்கிறாள். தனக்காக பாலியல் தொழிலாளியாக தன் தோழி துன்பப் படுவதையும், அதில் கிடைக்கும் பணத்தினை தானே வைத்துக் கொள்வதையும் நினைத்து யோ-ஜின் வருத்தப்படுகிறாள். ஆனால் ஜே-யியோங் இது கடினமாக இல்லை என்றும், தன்னிடம் வருபவர்கள் நல்லவர்கள் என்றும் கூறுகிறாள். இந்தியாவில் வசுமித்ரா என்ற பெண் இருந்ததாகவும், அவளிடம் பாலியல் இச்சைக்கு வருகின்றவர்கள் பின்னாளில் புத்த பிச்சுக்களாக மாறிவிடுவார்கள் என்றும், அவளைப் போலவே தானும் மாறிவிட்டதாக கூறுகிறாள். தன்னை வசுமித்ரா என்று அழைக்கும் படியும் தன் தோழியிடம் கூறுகிறாள்.

வசுமித்ரா தன்னுடைய தோழியிடம் வாடிக்கையாளரின் தொழில், அவர்கள் இவளுடைய பணிக்கு கொடுக்கும் பாராட்டுகள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறாள். ஒரு முறை இசையமைப்பாளருடன் மகிழுந்தில் வந்து, தன் தோழியையும் உணவருந்த அழைக்கிறாள். ஆனால் யோ-ஜின் அவளைக் கடிந்து கொள்கிறாள். இசையமைப்பாளரை தனக்கு பிடித்துள்ளதாகவும், அவர் தனக்காக ஒரு பாடல் பாடியதாகவும் கூறுகிறாள். இந்தத் தொழிலை விட்டுவிடலாம் என்று யோ-ஜின் கூறியும், அதில் தவறில்லை தொடர்வோம் என வசுமித்ரா சமாதானம் செய்கிறாள். ஒரு நாள் யோ-ஜின் காவலதிகாரிகள் வருவதை கவனிக்காமல் விட, வசுமித்தாரா ஜன்னல் வழியே விழுந்து காயமடைகிறாள். தன் தோழியை மருத்துவமையில் சேர்க்கும் யோ-ஜினிடம் வசுமித்திரா அந்த இசையமைப்பாளரை பார்க்க வேண்டுமென கூறுகிறாள்.

இசையமைப்பாளரிடம் செல்லும் யோ-ஜின், தன் தோழியின் நிலையை எடுத்துக் கூறி தன்னுடன் மருத்துவமைக்கு வர வேண்டுகிறாள். ஆனால் இசையமைப்பாளரோ அவள் கலவிக்கு சம்மதித்தால் தான் வருவதாக கூறுகிறான். அதற்கும் சம்மதம் தெரிவிக்கும் யோ-ஜின். இசையமைப்பாளரை மருத்துவமைக்கு கூட்டிசெல்லும் முன்பே வசுமித்ரா இறந்துவிடுகிறாள். தன்னுடைய ஆசையால்தான் ஜே-யியோங் இறந்துவிட்டதாகவும், அவள் அடைந்த துன்பத்தைப் போல தானும் அடையவேண்டுமென பாலியல் தொழிலாளியாக மாறி முன்பு வசுமித்ரா சென்ற வாடிக்கையாளர்களிடம் செல்கிறாள். இதனை அறிந்த யோ-ஜின் தந்தை அவளுடைய வாடிக்கையாளர்களை கடுமையாக சாடுகிறார்.

வாடிக்கையாளர்களில் ஒருவனை குடும்பத்தினர் முன்பு அடித்து, தன் மகள் வயதை ஒத்த பெண்ணுடன் இவன் தவறாக நடந்து கொள்கிறான் என்று கூறிவிடுகிறார். அந்த வாடிக்கையாளர் தற்கொலை செய்துகொள்கிறார். மறுமுறை தன்னுடைய மகளான யோ-ஜினிடம் வரும் வாடிகையாளரை கொலையும் செய்துவிடுகிறார். இதனால் காவல்துறை அவரை அழைத்துச் செல்கிறது. தந்தையும் இல்லாமல் தோழியும் இல்லாமல் தனித்திருக்கிறாள் யோ-ஜின்.

நடிப்பு

தொகு

வரவேற்பும் விருதும்

தொகு

சமாரிடன் கேர்ள் திரைப்படம் கொரியாவில் வசுல் சாதனை புரியவில்லை என்றாலும், 2004 ல் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் சில்வர் பீர் விருதினை வென்றது. மற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் கவனம் பெற்றது.[3]

ஆதாரங்கள்

தொகு
  1. "Samaria". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2012-03-04.
  2. "Poster for New Kim Gi-duk Film to Provoke Controversy". The Chosun Ilbo. 16 January 2004. பார்க்கப்பட்ட நாள் 2013-09-09.
  3. Hartzell, Adam. "Samaritan Girl". Koreanfilm.org. பார்க்கப்பட்ட நாள் 2013-09-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரிடன்_கேர்ள்&oldid=2908467" இலிருந்து மீள்விக்கப்பட்டது