3-அயன்
3-அயன் 2004ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் இயக்கியிருந்தார். ஜெ ஹீ,லீ சியோங்-யுனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கிம் கி-டகின் வழமையான பாணியைப் போலவே கதாப்பாத்திரங்கள் அதிகம் பேசாமல் நடித்திருந்தனர்.[3]
3-அயன் | |
---|---|
இயக்கம் | கிம் கி-டக் |
தயாரிப்பு | கிம் கி-டக் |
கதை | கிம் கி-டக் |
இசை | Selvian |
நடிப்பு | ஜெ ஹீ லீ சியோங்-யுனன் |
வெளியீடு | அக்டோபர் 15, 2004 |
ஓட்டம் | 88 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா ஜப்பான் |
மொழி | கொரியன் |
மொத்த வருவாய் | $2,965,315[1][2] |
கொரிய மொழியில் Bin-jip என்று பெயரிடப்பட்டிருந்த இத்திரைப்பட தலைப்பிற்கு காலியான வீடுகள் என்று பொருள். ஆங்கிலத்தில் 3-அயன் என்ற கோல்ப் மட்டை வகையின் பெயர் இடப்பட்டது.
கதைச் சுருக்கம்
தொகுஇத்திரைப்படத்திற்கு இரண்டு விதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.
ஒன்று :கணவனால் குடும்ப வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு பெண், தன் வீட்டில் எதிர்பாராவிதமாக வரும் திருடனுடன் காதல் கொள்கிறாள். பல நிகழ்வுகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டிலேயே கணவனுக்குத் தெரியாமல் வாழத்தொடங்குகிறார்கள்.
இரண்டு:கணவனின் துன்புருத்தலுக்கு ஆளான பெண், தனக்கான அன்பைப் பெற ஒரு திருடன் கதாப்பாத்திரத்தை கற்பனை செய்து கொள்கிறாள். அவன் மற்ற திருடர்களைப் போன்று பொருட்களைத் திருடாமல் வீடு வீடாக தங்கி வாழ்பவனாகவும். தங்குவதற்கு கூலியாக அங்கிருக்கும் வேலை செய்யாப் பொருட்களை சரிசெய்து, அழுக்குத் துணிகளை துவைப்பவனாகவும் இருப்பான். இவள் வீட்டிற்கு வந்து கணவனை உதைத்து இவளை மீட்டுச் செல்வான். அதையும் மீறி காவல்துறையிடம் பிடிபட்டால், அங்கிருந்து தப்பி இவளுடனே யாரும் அறியாத வண்ணம் மகிழ்வாக வாழ்வான்.
கதை
தொகுடி-சக் (ஜெ ஹீ) ஒரு வினோதமான திருடன். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் சாவித் துவாரங்கள் மறையும் படி பிரபல கடைகளில் விளம்பர தாள்களை ஒட்டுவான். மாலை வரை பூங்காவில் பொழுதை கழித்துவிட்டு முன்பு தாள் ஒட்டிய வீடுகளை நோட்டமிடுவான். அதில் விளம்பர தாள்கள் நீக்கப்படாத வீட்டில் பூட்டினை தகர்த்து உள்நுழைவான். பின் அதனை சொந்த வீடு போல எண்ணி அங்குள்ள பழுதான பொருட்களை சரிசெய்வதும், அழுக்குத் துணிகளைத் துவைப்பதும், சமையல் செய்து சாப்பிடுவதுமாக இருப்பான். இறுதியாக அங்குள்ள பொருட்கள் மற்றும் புகைப்படங்களுடன் தன்னையும் சேர்த்து ஒளிப்படக்கருவி மூலம் பதிவு கொள்வான்.
ஒரு முறை அவ்வாறு வீட்டிற்குள் செல்கிறான். ஆனால் அங்கு குடும்ப வன்முறைக்கு உட்பட் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு அறையாக திறந்து பார்க்கும் போதும் அவள் இருப்பதை அறியாமல் போகிறான். அவ்வீட்டில் செயல்படாத எடைபார்க்கும் கருவியை காண்கிறான். வழக்கம் போல அதனைச் சரிசெய்கிறான். இதையெல்லாம் காணும் அவள், இவன் சுயஇன்பம் காணுகையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். அவள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து உடனே அவ்விடத்தை விட்டு செல்ல முற்படுகிறான். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அதனை ஏற்று பேசும் அவள், அழைப்பு செய்த கணவனிடம் இவனைப் பற்றி எதுவும் கூறாமல் வைத்துவிடுகிறாள்.
வீட்டுவிட்டு வெளியேறிய டி-சக் மீண்டும் அவ்வீட்டிற்கு வருகிறான். சிறிது நேரத்தில் வருகின்ற அவளின் கணவன் அவளை மீண்டும் துன்புருத்தும் போது, கோல்ப் விளையாடும் சத்தம் கேட்கிறது. உடனே அவ்விடத்திற்கு வருகிறான். அங்கு டி-சக் கோல்ப் விளையாடிக்கொண்டுருப்பதைக் கண்டு காவல்துறையை அழைக்கிறான். டி-சக் அவனை கோல்ப் பந்தால் தாக்கிவிட்டு வெளியேருகிறான். தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சத்தம் எழுப்புகிறான். அடிப்பட்டுக் கிடக்கும் கணவனை பார்த்துவிட்டு சன்-ஹா திருடனின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்துகொள்கிறாள். காலையில் வழக்கம் போல டி-சக் தாள்களை வீட்டின் சாவித்துவாரத்தை மறைக்கும் படி ஒட்டிச் செல்கிறான். பின் பூங்காவில் நேரத்தினை கழிக்கிறான். அவனுடைய செய்கையை கவனித்து பின்தொடர்கிறாள். ஒரு பாக்சர் வீட்டிற்கு சென்று உறங்குகையில் அந்த பாக்சரும், அவன் மனைவியும் வந்துவிடுகிறார்கள். தங்கள் வீட்டில் அந்நியர்கள் உறங்குவதைக் கண்டு பாக்சர் டி-சக்கை உதைத்து வெளியேற்றிவிடுகிறார்.
மறுநாள் வேறு ஒரு வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு சரிசெய்ய வேண்டிய பொருட்களோ, அழுக்குத் துணிகளோ இல்லை. இணைந்து தேனீர் அருந்தி உறங்கிவிடுகிறார்கள். இறுதியாக ஒரு வீட்டில் தனிமையில் இருந்த கிழவன் இறந்துக் கிடப்பதையும், அவனுடன் நாயொன்று இருப்பதையும் கண்டு டி-சக் வெளியேற முற்படுகிறான். ஆனால் அவனைத் தடுத்து கிழவனுக்கு இறுதி சடங்கினை செய்யவைக்கிறாள். இருவரும் வீட்டில் இருக்கும் போது கிழவனைத் தேடி வரும் மகன், இவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடுகிறான். காவல் அதிகாரி இவர்களைப் பற்றி அறிந்து கொண்டு.
சன்-ஹாவை அவள் கணவனிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். சிறையில் இருக்கும் டி-சக் மனிதர்களின் பார்வையில் படாமல் வாழும் யுத்திகளை கற்றுக்கொள்கிறான். பின்பு அங்கிருந்து தப்பித்து சன்-ஹாவுடன் அவள் கணவனுக்கு தெரியாமல் நுழைந்து அவளுடன் வாழ்கிறான்.
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "3-Iron". Boxofficemojo. Retrieved March 04, 2012.
- ↑ "3-Iron French Gross"
- ↑ "Beyond Hollywood - 3-Iron review". Archived from the original on 2008-06-17. பார்க்கப்பட்ட நாள் 2016-06-09.