தி ஓல்டு மேன் அண்டு ஹிஸ் காட்
தி ஓல்டு மேன் & ஹிஸ் காட் (The Old Man and His God) சுதா மூர்த்தி எழுதிய ஆங்கில நூல். இது சிறு கதை வடிவிலான 25 நிகழ்வுகளின் தொகுப்பாகும். இந்தியாவின் உண்மையான ஜீவநாடியைத் தேடும் முயற்சியாக இவற்றை வர்ணிக்கிறார் நூல் ஆசிரியர். தமிழ்நாட்டின் சிற்றூரில் உள்ள ஒரு சிறு கோயிலின் கண் தெரியாத வயதான பூசாரி, இவர் தட்சணையாகத் தட்டில் இட்ட நூறு ரூபாய்த் தாளை மறுப்பதன் மூலம் பணத்தை "போதும், வேண்டாம்" என்று சொன்ன முதல் நபராக ஆசிரியரின் கருத்தைப் பதிவதில் ஆரம்பித்து, திபெத்தின் தலாய் லாமாவிற்கு அடைக்கலம் தந்த இந்திய நாட்டின் குடிமகளாக ஒரு முதிய திபெத்திய மாதின் அன்பைப் பெறுவது என்று பல சிறு சிறு நிகழ்வுகளில் தனது தேடலையும் கண்டுபிடிப்பையும் பதிகிறார் ஆசிரியர்.[1][2]
150px | |
நூலாசிரியர் | சுதா மூர்த்தி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | பென்குவின் புக்ஸ் |
ஆங்கில வெளியீடு | 2006 |
பக்கங்கள் | 131 |
ISBN | 0144001012, 9780144001019 |