தி சைக்கிளிச்டு (திரைப்படம்)

பைசைக்கிளிரான்/ தி சைக்கிளிச்டு (ஆங்கிலம்:The Cyclist, பாரசீக மொழி:بايسيكل‏ران) என்ற திரைப்படம் 1987 ல் வெளிவந்தது. ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் அவர்கள் இயக்கிய திரைப்படம் இது.

கதை தொகு

மரண‌த்தருவாயில் இருக்கும் தன் மனைவியின் அறுவை சிகிட்சைக்குப் பணம் வேண்டி ஈரானில் வசிக்கும் ஆப்கான் அகதி ஒருவர் அங்குள்ள ஒரு சதுக்கத்தில் 7 இரவுகள் 7 பகல்கள் இடைவிடாது மிதிவண்டியை ஓட்டுகிறார்.[1] ஆப்கான் அகதிகள் ஈரானில் துயரப்படுவதையும் அவரர்களால் இச்சிக்கல்களிலிருந்து மீள முடியாது எனவும் இத்திரைப்படத்தைப் பற்றி விமரிசகர் ஒருவர் குறிப்பிடுகிறார்.[2]

விருது தொகு

ஹவாய் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் விருது பெற்றது.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு