தி மில்லியன் டாலர் ஹோம்பேஜ்
த மில்லியன் டாலர் ஹோம்பேஜ் (The Million Dollar Homepage) என்பது அலெக்சு டியூ என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் தன் பல்கலைக்கழக படிப்புக்காக பணம் சேர்க்க இத்தளத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தினார். 10 X 10 பிக்செல்களில் ஒரு விளம்பரம் என்ற அளவில், ஆயிரக்கணக்கான பிக்சல்களில் விளம்பரங்கள் சேர்ந்தன. இந்த சிறு பிக்செல்களில் உள்ள நக அளவு படங்கள் வேறு ஒரு இணையதளத்திற்கு இட்டுச் செல்கின்றன. இத்தளத்தின் அனைத்து பிக்செல்களிலும் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தித்தாள் இத்தளம் பிற தளங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என்று செய்தி வெளியிட்டது.
வலைத்தள வகை | விளம்பரத் தளம் |
---|---|
உரிமையாளர் | அலெக்சு டியூ |
உருவாக்கியவர் | அலெக்சு டியூ |
வருவாய் | அமெரிக்க $1,037,100 |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | இல்லை |
வெளியீடு | 26 ஆகஸ்ட் 2005 |
அலெக்சா நிலை | 58,222 (March 2013[update])[1] |
தற்போதைய நிலை | இயக்கத்தில் |
உரலி | MillionDollarHomepage.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Milliondollarhomepage.com Site Info". Alexa Internet. Archived from the original on 2016-06-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-03.
இணைப்புகள்
தொகு- The Million Dollar Homepage (ஆங்கிலத்தில்)