தி ஸ்பைடர் அண்ட் தி பிளை
" தி ஸ்பைடர் அண்ட் தி ஃப்ளை " (The Spider and the Fly) என்பது மேரி ஹவிட் (1799-1888) எழுதி 1829 இல் வெளியான கவிதையாகும். கவிதையின் முதல் வரி "'நீ என் வீட்டின் வரவவேற்பறைக்குள் வருவாயா?" என்று சிலந்தி, பூச்சியிடம் கேட்பதாகத் துவங்குகிறது. இந்தக் கவிதையானது, ஒரு தந்திரமான சிலந்தி மயக்கும் வார்த்தைகள், சூழ்ச்சி ஆகியனவற்றைச் செய்து எவ்வாறு ஒரு பூச்சியினைச் சிக்க வைக்கிறது என்பது பற்றியது. இது, தங்கள் உண்மையான நோக்கங்களை மறைக்க முகஸ்துதி மற்றும் வசீகரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான எச்சரிக்கைக் கதையாகும்.
தி ஸ்பைடர் அண்ட் தி பிளை | |
---|---|
by மேரி ஹவிட் | |
Subject(s) | நீதிக் கதை |
Genre(s) | சிறுவர் கவிதை, நகைச்சுவை |
Publication date | 1829 |
இந்தக் கவிதை தி நியூ இயர்ஸ் கிஃப்ட் அண்ட் ஜூவனைல் சாவனிரில் "எ நியூ வெர்சன் ஆஃப் அன் ஓல்டு ஸ்டோரி" எனும் துணைத் தலைப்புடன் வெளியிடப்பட்டது, [1] இதன் தலைப்புப் பக்கத்தில் 1829 ஆம் ஆண்டின் வெளியீட்டு ஆண்டைக் கொண்டுள்ளது, ஆனால் புத்தாண்டு நாளுக்கு முன்பே வெளியிடப்பட்டு அக்டோபர் 1828 இல் பத்திரிகைகளில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.[2]
தொடக்க வரி அனைத்து ஆங்கிலப் பதிப்புகளிலும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மேற்கோள் காட்டப்பட்ட முதல் வரிகளில் ஒன்றாகும். [3] பெரும்பாலும் "என் வரவேற்பறைக்குள் நுழை" (Step into my parlour) அல்லது "என் வரவேற்பறைக்குள் வா" (Come into my parlour) என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறது, இது ஒரு உள்ளொழியுரையாக மாறிவிட்டது, இது ஒரு தவறான உதவி அல்லது நட்பைக் குறிக்கப் பயன்படுகிறது, அது உண்மையில் ஒரு பொறியாகும்.
தழுவல்கள்
தொகு- திரைப்படம்
- ராபர்ட் பி. மாண்டல் நடித்த தி ஸ்பைடர் அண்ட் தி பிளை (1916) [4]
- தி ஸ்பைடர் அண்ட் தி பிளை (1949)
- 1923 கார்ட்டூன்: ஈசாப் ஃபேபிள்ஸ் ஸ்டுடியோவின் நாடகக் குறும்படம். [5]
- இசை
- 1930 ஆம் ஆண்டு பார்பெக்யூ பாப்பின் பாடல்
- ஃபேட்ஸ் வாலர், ஆண்டி ரசாஃப் மற்றும் ஜேசி ஜான்சன் ஆகியோரின் 1938 -இல் வெளியான பாடல்
- த ரோலிங் ஸ்டோன்ஸின் 1965 இல் வெளியான பாடல்
- 1989 ஆம் ஆண்டு வெளியான பாடலான தி க்யூர் (" தாலாட்டு ") கவிதையைக் குறிப்பிடுகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Watts, Mrs. Alaric (Priscilla Maden), ed. (1829). The New Year's Gift; and Juvenile Souvenir (in ஆங்கிலம்). London: Longman, Rees, Orme, Brown, and Green. pp. 49–53.
- ↑ For example, in The Gentleman‘s Magazine, Oct. 1828 (in HathiTrust).
- ↑ Howitt, Mary (October 2002). The Spider and the Fly. Simon & Schuster Books for Young Readers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0689852894.
- ↑ "The Spider and the Fly (1916) - Overview - TCM.com". Turner Classic Movies (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ "The Fable of the Spider and the Fly". IMDb. பார்க்கப்பட்ட நாள் 13 November 2012.
வெளி இணைப்புகள்
தொகு- கவிதையின் உரை, லூயிஸ் கரோல் பகடியுடன்