தீங்குயிர்

தீங்குயிர் அல்லது பீடை (Pest) என்பது, மனிதரினால், தீங்கானது அல்லது தேவையற்றது எனக் கருதப்படக்கூடிய இயல்புகளைக் கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தைக் குறிக்கும். தீங்குயிர்கள் வேளாண்மைப் பயிர்களுக்கு இழப்பு ஏற்படுத்துதல், கால்நடைகளின் மீது ஒட்டுண்ணிகளாக இருத்தல், வீடுகளிலும், பிற கட்டிடங்களிலும் இருக்கும் உணவுப் பொருட்களையும் பிற பொருட்களையும் அழித்தல் அல்லது அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல், மனிதர்களுக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்களைக் கடத்துதல் போன்ற செயற்பாடுகளைத் செய்கின்றன. தீங்குயிர்களிற் பெரும்பாலானவை பூச்சிகளாக இருப்பினும், எலி, அகிழான், சில பறவைகள் போன்ற விலங்குகளும், பயிர்களிடையே வளரும் புல், பூண்டு முதலிய களைகளாகக் கருதப்படும் தாவரங்களும் தீங்குயிர்களாகக் கருதப்படுகின்றன. இவற்றுடன், பங்கசுக்கள், தீநுண்மங்கள் போன்றவையும் கூடத் தீங்குயிர்களாகக் கருதப்படுவது உண்டு.

வண்டு ஒன்றின் குடம்பி பூச்சியியல் சேமிப்பில் உள்ள பூச்சி மாதிரியொன்றை அழிப்பதை இங்கே காணலாம்.

ஒரே உயிரினம் சில சூழல்களில் தீங்குயிராகவும், வேறொரு சூழலில் பயனுள்ளதாகவும் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. பயிர்களிடையே வளரும்போது களைகளாகக் கருதப்பட்டு அகற்றப்படும் சில பூண்டுகள், வேறு சூழல்களில் மருந்துப் பொருட்களாகப் பயன்படுவது உண்டு. ஒரு சூழலில் தீங்கற்றவையாகக் காணப்படும் சில விலங்குகள், இன்னொரு சூழலில் பெரும் சூழலியல் தாக்கங்களை ஏற்படுத்தியதும் அறியப்பட்டுள்ளது.

சில பொதுவான தீங்குயிர்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீங்குயிர்&oldid=1427934" இலிருந்து மீள்விக்கப்பட்டது