வீட்டு ஈ

பூச்சி இனம்
வீட்டு ஈ
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
டிப்டிரா
பிரிவு:
சைசோபோரா
குடும்பம்:
மசுடே
பேரினம்:
மசுக
இனம்:
M. டொமசிடிகா
இருசொற் பெயரீடு
மசுக டொமசிடிகா
லின்னேயசு, 1758
துணைச்சிற்றினம்

வீட்டு ஈ (Housefly) என்பது சைக்ளோரர்பாவின் துணை வரிசையைச் சேர்ந்த இருசிறகிப் பூச்சி ஆகும். இது செனோசோயிக் சகாப்தத்தில், ஒருவேளை மத்திய கிழக்கில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, மேலும் இது மனிதர்களின் கூட்டு வாழ்க்கையோடு உலகம் முழுவதும் பரவியுள்ளது. வீடுகளில் பொதுவாக காணப்படும் ஈ இனம் இதுவேயாகும். வளர்ந்த ஈக்கள் சாம்பல் முதல் கருப்பு நிறம் வரையானதாகவும், மார்பில் நான்கு அடர்வண்ண, நீளக் கோடுகளுடன், சற்று மயிரிழைகள் கொண்ட உடலுடன், ஓர் இணை இறக்கைகள் கொண்டவை. இவை சிவப்பு நிறக் கூட்டுக் கண்கள் கொண்டவை.

பெண் ஈ வழக்கமாக ஒரு முறை மட்டுமே இணைசேரும் என்றாலும் விந்துக்களை பின்னரும் பயன்படுத்த சேமித்துக்கொள்கிறன. இவை உணவு கழிவுகள், அழுகிய பிணம், மலம் போன்ற சிதைந்துபோகும் கரிமப் பொருட்களில் சுமார் 100 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகளில் இருந்து கால்கள் இல்லாத வெள்ளை நிற புழுக்கள் வெளிவருகின்றன. இரண்டு முதல் ஐந்து நாட்கள் வளர்ச்சிக்குப் பின்னர், இவை உருமாற்றம் அடைந்து, சுமார் 8 மில்லிமீட்டர்கள் (38 அங்குலம்) நீளமான சிவப்பு-பழுப்பு நிற கூட்டுப்புழுக்களாக ஆகின்றன. வயதுவந்த ஈக்கள் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை வாழ்கின்றன, ஆனால் இவை குளிர்காலத்தில் ஓய்வுறு (ஓய்வு+உறக்கம்) கொள்கின்றன. வளர்ந்த ஈக்கள் பலவிதமான திரவ அல்லது கூழ்ம பொருட்களையோ, இவற்றின் உமிழ்நீரால் கரைக்கபட்ட திடப்பொருட்களையோ உணவாக கொள்கின்றன. இவை தங்கள் உடலிலும், மலத்திலாலும் நோய்க்கிருமிகளை பரப்பும் வாய்ப்பு உள்ளது. இவை உணவை மாசுபடுத்தக்கூடியனவாகவும், உணவுவழி நோய்த்தொற்றுகளை கொண்டுவருவனவாகவும் அதே நேரத்தில், உடல் ரீதியாக எரிச்சலூட்டக்கூடியனவாகவும் உள்ளன. இந்த காரணங்களுக்காக, இவை தீங்குயிர்களாக கருதப்படுகின்றன.

வயது மற்றும் பாலின நிர்ணயம் குறித்த ஆராய்ச்சியில் ஆய்வகத்தில் ஈக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய கிரேக்க தொன்மம் மற்றும் ஈசாப்பின் துடுக்குத்தனமிக்க பூச்சி போன்ற இலக்கியக் கதைகளில் ஈ இடம்பெற்றுள்ளது. வில்லியம் பிளேக்கின் 1794 ஆண்டைய கவிதையான "தி ஃப்ளை" போலவே, எழுத்தாளர்கள் சில சமயங்களில் வாழ்க்கையின் சுருக்கத்தைப் பற்றி பேச ஈயைத் தேர்வு செய்கிறார்கள். [1]

விளக்கம்

தொகு
 
இரண்டு பெரிய கூட்டுக் கண்களும், மூன்று கண் புள்ளிகள் கொண்ட ஒரு பெண் வீட்டு ஈயின் தலை

வயதுவந்த வீட்டு ஈக்கள் பொதுவாக 6 முதல் 7 mm (14 முதல் 932 அங்) நீளமானதாகவும், 13 முதல் 15 mm (12 முதல் 1932 அங்) வரை இறக்கையுடன் அகலம் கொண்டதாக இருக்கும். பெண்கள் ஆண்களை விட பெரிய சிறகுகள் கொண்டவை. ஆண் ஈக்கள் ஒப்பீட்டளவில் நீண்ட கால்கள் கொண்டவை. பெரிதான ஈயின் தலையில் கூட்டுக் கண்கள் அமைந்துள்ளன. இவை தலையின் இரு பகுதிகளிலும் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் 4, 000 நுண்கண்கள் அமைந்துள்ளன. இவை நெருக்கமாக உள்ளன. இவை கூட்டுக் கண்களாகும். இவற்றின் உதவியால் பின் பக்கமுள்ளவற்றையும் ஈயால் பார்க்க முடியும். ஈயால் பகலில் பார்க்க முடியுமே தவிர இரவில் எதையும் பார்க்க இயலாது. இரண்டு கண்களுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கும். இவ்விடைவெளி ஆண் ஈக்குக் குறுகியும் பெண் ஈக்கு அகன்றும் இருக்கும்.

ஈக்கு தாடைகள் ஏதும் இல்லாததால் இவை யாரையும் கடிப்பதில்லை. வீட்டு ஈக்கள் தான் உண்ணக் கருதும் கடினமான பொருள்கள் மீது தன் தட்டையான இரு உதடுகள் மூலம் உமிழ்நீரை உமிழிகின்றன. உமிழ் நீரில் உண்ணும் பொருள்கள் கரையும்வரை அதைத் தேய்த்து, உமிழ் நீரில் பொருள்கள் நன்கு கரைந்த பின்னர் அதைத் தன் உறிஞ்சியால் உறிஞ்சி தன் தீனிப் பையில் சேமித்துக் கொள்ளும். தான் ஓய்வாக இருக்கும்போது மாடு அசைபோடுவது போல் அப்பையிலுள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும். இவ்வாறு உண்ணும் போது அத் திரவ உணவு அங்குமிங்குமாகச் சிதறி விழும். இதனால் ஈ இருக்குமிடம் அசுத்தமாகி விடும்.

இதன் கால்களின் நுனிப் பகுதியில் கொக்கி போன்ற உறுப்புகள் உள்ளன. இக்கால்களிலும் உணர்கொம்புகளிலும் மெல்லிய மயிரிழைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும், ஈ எங்கு அமர்கிறதோ அவ்விடத்தில் உள்ள அசுத்தங்களில் காணும் நோய்க்கிருமிகள் அம்மயிரிழைகளில் ஒட்டிக்கொள்ளும். அதற்கு அம்மயிரிழைகளில் உள்ள ஒருவித பிசுபிசுப்பும் பெருந் துணை செய்கிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Appendix C: The State Emblem of India (Prohibition of Improper Use) Act, 2005", Righteous Republic, Harvard University Press, p. 257, 2012, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4159/harvard.9780674067288.c9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-06728-8 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டு_ஈ&oldid=3051246" இலிருந்து மீள்விக்கப்பட்டது