தீஜ் திருவிழா

தீஜ் (Teej) என்பது இந்து சமயத்தில் பெண்களால் கொண்டாடப்படும் பண்டிகைக்களுக்கான பொதுவான பெயர் ஆகும். ஹர்யாலி தீஜ் மற்றும் ஹர்டாலிகா தீஜ் ஆகியவை பருவப் பெயர்ச்சிக் காற்று காலங்களை வரவேற்கும் விதமாக சிறுமிகள் மற்றும் பெண்களால் பாடல்கள், நடனங்கள் மற்றும் வழிபாடுகளால் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். தீஜ் பருவக்காற்று விழாக்கள் பார்வதி தேவி சிவனுடன் இணைவதைக் கொண்டாடும் வகையில் அமைகிறது.[1] [2]தீஜ் கொண்டாட்டத்தின் போது பெண்கள் அடிக்கடி நோன்பு மேற்கொள்கிறார்கள். ஹர்டாலிகா தீஜ் பண்டிகையானது வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் (பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம், உத்தர்காண்ட், சிக்கிம், இராஜஸ்தான்) நேபாளத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் நாட்காட்டியின்படியான சிரவண் மற்றும் புரட்டாசி மாதங்களில் பருவக்காற்றைக் கொண்டாடும் விதமாகப் பெண்களால் தீஜ் விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாக்காலத்தில் பெண்கள் பார்வதி மற்றும் சிவன் ஆகிய தெய்வங்களை வழிபடுகி்ன்றனர்.

  • தீஜ்
  • तीज
தீஜ் விழா கொண்டாடும் பெண்கள்
கடைபிடிப்போர்பெண்கள்
வகைபருவக்காற்று திருவிழா
நாள்சூலை–செப்டம்பர்

மேற்கோள்கள்

தொகு
  1. “[MITCH EPSTEIN].” Aperture, no. 105, 1986, pp. 52–57. JSTOR, www.jstor.org/stable/24472056. Accessed 6 Aug. 2021.
  2. "Teej Festival | What is Teej? | Type of Teej Festival | Names of Teej Festival | Upcoming Teej Festival". thedivineindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீஜ்_திருவிழா&oldid=3459156" இலிருந்து மீள்விக்கப்பட்டது