தீபக் புனியா

இந்திய மல்யுத்த விளையாட்டு வீரர்

தீபக் புனியா (Deepak Punia) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மல்யுத்த விளையாட்டு வீரராவார். எதேச்சை பாணி மல்யுத்த விளையாட்டில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் எதேச்சை பாணி 86 கி.கி எடைப் பிரிவில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றார். மல்யுத்த வீரர் யாகித் வலென்சியாவுக்கு எதிராக தனது காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தீபக் புனியாவிற்கு இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.[2]

தீபக் புனியா
Deepak Punia
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புசாரா, இயாச்சர் மாவட்டம், அரியானா, இந்தியா[1]
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுஎதேச்சை மல்யுத்தம்
நிகழ்வு(கள்)86 கி.கி
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் எதேச்சை மல்யுத்தம்
நாடு  இந்தியா
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் - - -
உலக வெற்றியாளர் - 1 -
உலக இளையோர் மல்யுத்தம் 1 1 -
உலக படைப்பயிற்சி வெற்றியாளர் 1 - -
ஆசிய மல்யுத்த வெற்றியாளர் - - 2
உலக வெற்றியாளர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 நூர் சுல்தான் 86 கி.கி
உலக இளையோர் மல்யுத்த வெற்றியாளர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 திரனவா 86 கி.கி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 தாலின் 86 கி.கி
ஆசிய மல்யுத்த வெற்றியாளர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2021 அல்மாட்டி 86 கி.கி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 சியான் 86 கி.கி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 புது தில்லி 86 கி.கி
உலக படைபயிற்சி வெற்றியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 திபிலிசி 85 கி.கி
ஆசிய இளையோர் மல்யுத்தம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 புது தில்லி 86 கி.கி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_புனியா&oldid=3210448" இலிருந்து மீள்விக்கப்பட்டது