தீப்சிகா நக்பால்

இந்திய நடிகை

'தீப்சிகா' நக்பால் (Deepshikha Nagpal) தீப்சிகா என்று அழைக்கப்படுபவர், ஓர் இந்திய நடிகையும் திரைப்பட இயக்குநரும் ஆவார். இவர் முக்கியமாக இந்தி திரைப்படங்கள் மற்றும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். கோய்லா, பாத்ஷா, தில்லாகி மற்றும் பார்ட்னர் உள்ளிட்ட பல வெற்றிகரமான இந்தி படங்களில் நடித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் கலர்ஸ் தொலைக்காட்சியின் மெய்மைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8இல் போட்டியாளராகப் பங்கேற்றார்.

தீப்சிகா நக்பால்
தீப்சிகா நக்பால் 2020-இல்
பிறப்புதீப்சிகா நக்பால்
பணி
  • நடிகை
  • திரைப்பட இயக்குநர்
  • திரைப்பட எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994–present
வாழ்க்கைத்
துணை
  • ஜீத் உபேந்திரா
    (தி. 1997; விவகாரத்து 2007)
  • கேசாய் அரோரா
    (தி. 2012; விவகாரத்து 2016)
பிள்ளைகள்வேதிகா, விவான்[1]

கொய்லா திரைப்படம் வெளியான பிறகுதான் இந்தி திரையுலகில் பாராட்டைப் பெற்றார். இவர் பாலிவுட் திரைப்படமான தூம் தாதக்காவில் சதீசு கௌசிகுடன் பணியாற்றியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இயக்குநராக இவரது முதல் படம், யே டூரியன் ஆகும். இது ஆகத்து 2011-இல் வெளியிடப்பட்டது.[2] 2014-இல் இவர் ஒரு போட்டியாளராக பிக் பாஸ் 8-இல் கலந்துகொண்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தீப்சிகா ஜீத் உபேந்திராவினை திருமணம் செய்துகொண்டார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தொலைக்காட்சி நடிகை ஆர்த்தி நக்பால் இவரின் மூத்த சகோதரி ஆவார்.[3] ஆர்த்தி சனவரி 2012-இல், இந்தூரைச் சார்ந்த கொண்ட கேசவ் அரோராவினை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர் யே டூரியன் பட அறிமுக இயக்குநராக உடன் நடித்த நடிகரும் ஆவார்.[4][5][6]

தீப்சிகா கலர்ஸ் மெய்ம்மைக் காட்சி பிக் பாஸ், 8-இல் பங்கேற்றார். 21ஆவது நாளில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mother's Day 2021: 'My feelings took a backseat, and my kids became priority', says single mom Deepshikha Nagpal" (in en). 8 May 2021 இம் மூலத்தில் இருந்து 20 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220720192939/https://www.freepressjournal.in/television/mothers-day-2021-my-feelings-took-a-backseat-and-my-kids-became-priority-says-single-mom-deepshikha-nagpal. 
  2. "Deepshikha Nagpal is ready to change perceptions!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 August 2011. Archived from the original on 26 September 2012. பார்க்கப்பட்ட நாள் 5 September 2011.
  3. "When reel into turns real for Deepshikha Nagpal". Daily News and Analysis.
  4. "Deepshikha is all set to tie the knot with Keshav Arora". மிட் டே.
  5. "Don't want to talk about it: Deepshikha Nagpal on husband Kaishav Arora threatening to kill her and kids". Archived from the original on 26 April 2015.
  6. "TV actress Deepshikha Nagpal restrains husband from entering home". 24 April 2015.
  7. "Bigg Boss 8 eviction: Deepshikha Nagpal out!". Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 12 October 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்சிகா_நக்பால்&oldid=4169362" இலிருந்து மீள்விக்கப்பட்டது