தீர்த்தன் வனவிலங்கு காப்பகம்
தீர்த்தன் வனவிலங்கு காப்பகம் (Tirthan Wildlife Sanctuary) இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது தீர்த்தன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[1][2] இந்த காப்பகத்தில் அடர்ந்த காடுகளும் இக்காடுகளில் பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன. நிர்வாக செயல்திறன் மதிப்பீட்டின் படி தீர்த்தன் வனவிலங்கு காப்பகம் இந்தியாவின் சிறந்த நிர்வகிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[3][4]
அமைவிடம்
தொகுதீர்த்தன் வனவிலங்கு காப்பகம் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 6,112 எக்டேர் (15,100 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[5] இந்தக் காப்பகம் பெரும் இமயமலை தேசியப் பூங்காவுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1] இது 2,100 மீட்டர் முதல் 4,900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா மற்றும் சண்டிகரிலிருந்து குல்லுவுக்கு நேரடிப் பேருந்துகள் மற்றும் வாடையுந்துகள் மூலம் தீர்த்தன் வனவிலங்கு சரணாலயத்தை அடையலாம்.[1]
தாவரங்களும் விலங்குகளும்
தொகுஇந்தக் காப்பகம் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பான் ஓக் காடு, கார்சு ஓக் காடு மற்றும் ஊசியிலைக் காடு போன்ற பல்வேறு வனப்பகுதிகளை இது கொண்டுள்ளது. பனிச்சிறுத்தை, கத்தூரி மான், குரைக்கும் மான், ஆசியப் பழுப்புக் கரடி மற்றும் காஷ்மீர் பறக்கும் அணில் போன்ற பிற முக்கியமான வனவிலங்குகளும் இங்கு உள்ளன.[5] தீர்த்தன் வனவிலங்கு காப்பகம் இமயமலை வரையாடு பாதுகாப்பிற்கான சிறப்பிடமாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Tirthan Wildlife Sanctuary Kullu, How to Reach Tirthan Sanctuary". www.kulluonline.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ "The official website of Great Himalayan National Park | A UNESCO World Heritage" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ "The GHNP and Tirthan Wildlife Sanctuary Ranked as Best Managed Protected Areas of India | Himachal Watcher" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-15. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ "GHNP and Tirthan Wildlife Sanctuary in HP ranked best managed Protected Areas in the country". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-15. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ 5.0 5.1 "BirdLife Data Zone". datazone.birdlife.org. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.