தீர்த் ராம்
இந்து மதம் மற்றும் சமூக சேவைகள் செய்து புகழ் பெற்றவர்களுள் ஒருவர் தீர்த்ராம். பஞ்சாபிலுள்ள முராரிவாலா கிராமத்தில் 22-10-1873ல் பிறந்த இவர் அத்வைத் அம்ரித் வர்சினி சபா எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் சேவையாற்றினார். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் சில காலம் லாகூரில் உள்ள கிறித்துவக் கல்லூரி ஒன்றில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 1901-ல் துறவு மேற்கொண்ட பின்பு சன்யாசி ராம்தீர்த் என அழைக்கப்பட்டார்.