தீவினை (பௌத்தநெறி)
தீவினைகள் பத்து என்று பௌத்தநெறி குறிப்பிடுகிறது. மணிமேகலை நூலில், இவை என்னென்ன என்று அறவண அடிகள் மணிமேகலைக்கு விளக்குகிறார். இவற்றைப் பாரமிதை என்றும் வழங்குவர். அவை:
- கொலை, களவு, காமம் – 3
- பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் – 4
- வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி – 3 [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்,
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர் - மணிமேகலை, காதை 24, 125-131