துகாரினோவைட்டு
துகாரினோவைட்டு (Tugarinovite) என்பது MoO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் அரிய மாலிப்டினம் ஆக்சைடு கனிமமாகும். கந்தக குறைபாட்டைக் குறைக்கும் சூழலில் உருகா உருமாற்றத்துடன் தொடர்புடைய முதன்மை கனிம கட்டமாக துகாரினோவைட்டு தோன்றுகிறது. கனிமம் தோன்றுமிடத்தில் யுரேனினைட்டு, மாலிப்டினைட்டு, கலீனா, சிர்கான் மற்றும் உல்பெனைட்டு ஆகிய கனிமங்களுடன் காணப்படுகிறது.[1]
துகாரினோவைட்டு Tugarinovite | |
---|---|
துகாரினோவைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | MoO2 |
இனங்காணல் | |
நிறம் | அடர் இளஞ்சிவப்பு-பழுப்பு |
படிக இயல்பு | படிகங்கள், வரியிட்ட பட்டைகள் |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
இரட்டைப் படிகமுறல் | பல்கூட்டிணைவு |
மோவின் அளவுகோல் வலிமை | 4.6 |
மிளிர்வு | மசகு முதல் உலோகம் வரை |
கீற்றுவண்ணம் | பசுமை கலந்த சாம்பல் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 6.58 (கணக்கிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு |
பலதிசை வண்ணப்படிகமை | வெளிர் சாம்பல் முதல் அடர் இளஞ்சிவப்பு வரை; வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து நீல நிற ஆலிவ்-பழுப்பு நிறத்தில் பிரதிபலித்த ஒளியில் பழுப்பு நிறம். |
மேற்கோள்கள் | [1][2][3] |
முதன்முதலில் உருசியாவின் தூர-கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமுர்சுகாயா மாகாணத்தில் உள்ள லென்சுகாய் மாலிப்டினம்-யுரேனியம் படிவுகளில் துகாரினோவைட்டு கண்டறியப்பட்டது. இது மாசுகோவில் உள்ள வெர்னாட்சுகி நிறுவனத்தைச் சேர்ந்த புவி வேதியியலாளர் இவான் அலெக்சீவிச்சு துகாரினோவின் நினைவாக கனிமத்திற்கு துகாரினோவைட்டு எனப் பெயரிடப்பட்டது. உருசியாவில் கிடைத்ததற்கு அடுத்து மெக்சிகோவின் சிகூவாகூவாவில் உள்ள அலெண்டே விண்கல், சப்பானின் நான்செய் தீவுக்கூட்டம் மற்றும் செக் குடியரசின் போகிமியா ஆகிய இடங்களிலும் துகாரினோவைட்டு கனிமம் இருப்பதாக பதிவாகியுள்ளது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2022-05-24. பார்க்கப்பட்ட நாள் 2024-01-20.
- ↑ 2.0 2.1 Tugarinovite on Mindat.org
- ↑ Tugarinovite on Webmin