கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், துக்கடா என அழைக்கப்படும். துக்கடா என்பதற்கு ‘அளவில் சிறிய’ எனப்பொருள்.

நிகழ்த்தப்படும் தருணம் தொகு

பொதுவாக இராகம் தானம் பல்லவி எனும் இசைவடிவம் தனி ஆவர்த்தனத்துடன் முற்றுப் பெற்ற பிறகு தில்லானாக்களும் துக்கடாக்களும் பாடப்படும்.

சிறப்பு தொகு

ஏறத்தாழ 75 சதவிகித நேரம் முடிந்த நிலையில், பாடகர் தனது முறைப்படி வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிப்பகுதியை முடித்துக்கொண்டு அளவில் சிறிய பாடல்களை பாடத் தொடங்குகிறார். நேயர்களின் ‘வேண்டுகோள் பாடல்’களையும் பாடுகிறார். துக்கடாக்கள் பாடப்படும் அந்த காலகட்டம், பாடகருக்கும் நேயர்களுக்கும் இடையேயுள்ள உறவுப்பாலத்தை வலுப்படுத்தும் தருணமாகும்.

பாடல்களின் பட்டியல் தொகு

பரவலாக மேடைகளில் துக்கடாவாக பாடப்படும் புகழ்மிக்க பாடல்கள்:

  1. குறை ஒன்றும் இல்லை...

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்கடா&oldid=3127116" இலிருந்து மீள்விக்கப்பட்டது