துக்கிபதி நாகேசுவர ராவ்

துக்கிபதி நாகேசுவர ராவ் (Dukkipati Nageswara Rao) இவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருட்டிணா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர் ஆவார். [1]

துக்கிபதி நாகேசுவர ராவ்

இவர் 16 முறை சிறைக்குச் சென்றுள்ளார். 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தனது கிராமமான நந்தமூருவில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான பேயெருவில் மகாத்மா காந்தியை சந்தித்தார். ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரத்திற்காக இவர் போராடிய போராட்டத்திற்கு ஏற்ப வழங்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தையும் தாமிர பத்திரத்தையும் (சான்றிதழ்) ஆந்திர அரசு இவரது மரணத்திற்குப் பின் வழங்க முயன்றது. இவரது குடும்பம் அதை எந்தவொரு பண நலனுக்காகவோ அல்லது நிதி ஆதாயத்துக்காகவோ அல்ல என்று கூறி ஏற்க மறுத்தது. ஆந்திராவின் பல சிறைகளில் அடைப்பட்டதைத் தவிர, சுதந்திரப் போராட்டத்தின் போது மறைந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தின் போது பெல்லாரி. திருச்சிராப்பள்ளி, வேலூர் போன்ற இடங்களின் சிறைகளிலும் இவர் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. B. Seshagiri Rao. History Of Freedom Movement In Guntoor District 1921-47. Prasanna Publications. பார்க்கப்பட்ட நாள் 2010-12-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்கிபதி_நாகேசுவர_ராவ்&oldid=3034838" இலிருந்து மீள்விக்கப்பட்டது