துசியோனைட்டு
துசியோனைட்டு (Tusionite) என்பது MnSn(BO3)2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட முக்கோண வடிவமைப்பிலான போரேட்டு கனிமமாகும். நிறமற்ற நிலையில் இருந்து இக்கனிமம் அரிதாக ஒளிபுகும் தன்மையுடையதாகவும், ஒளி கசியும் தன்மையும் உடைய மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் இருக்கிறது. 18.86% மாங்கனீசு, 40.76% வெள்ளீயம், 7.42% போரான் மற்றும் 32.96% ஆக்சிசன் என்பது இக்கனிமத்தின் இயைபு ஆகும். வெப்பநீர்ம தாதுவின் இறுதிக்கட்ட நிலையில் உள்ள கனிமமாக காணப்படும் துசியோனைட்டு, கிரானைட் வகை தீப்பாறைகளில் காணப்படும் ஒழுங்கற்ற குழிகளில் அரிதாக காணப்படுகிறது.
துசியோனைட்டு | |
---|---|
பொதுவானாவை | |
வகை | போரேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | MnSn(BO3)2 |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது.இளமஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பழுப்பு |
படிக இயல்பு | மெல்லிய தகடு அடுக்குப் படிகம் |
படிக அமைப்பு | முக்கோணம் |
பிளப்பு | [001] முழுமை |
மோவின் அளவுகோல் வலிமை | 5-6 |
மிளிர்வு | கண்ணாடித் தன்மை |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசிவு |
ஒப்படர்த்தி | 4.73 |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nω = 1.854 nε = 1.752 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.102 |
மேற்கோள்கள் | [1][2][3] |
துசியோனைட்டு அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தானில் உள்ள மலைத்தொடரான பாமிர் மலைகளில் காணப்படுகின்ற துசியான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் முதன்முதலாக 1983 ஆம் ஆண்டில் இது கண்டறியப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டின் சில பகுதிகளிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ரிவர்சைடு மாவட்டத்திலும் துசியோனைட்டு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் துசியோனைட்டு கனிமத்தை Tsn[4]என்ற குறியீட்டால் கோல்மனைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.webmineral.com/data/Tusionite.shtml Webmineral data
- ↑ http://www.mindat.org/min-4062.html Mindat w/ location data
- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/tusionite.pdf Mineral Handbook
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.