துணுக்காய் கல்வி வலயம்

துணுக்காய் கல்வி வலயம் (Thunukkai educational zone) இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் ஓர் கல்வி வலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள 12 கல்வி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[1] இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பரீட்சைகள் நடாத்துதல், ஆசிரியர், அதிபர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளையும் இக்கல்வி வலயமே மேற்கொண்டு வருகின்றது. இக்கல்வி வலயத்தில் பாண்டியன்குளம், ஒட்டுசுட்டான், துணுக்காய் என மூன்று கல்விக் கோட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இலங்கையின் நிருவாக மாவட்டமான முல்லைத்தீவில் அமைந்துள்ள இரு கல்வி வலயங்களில் இதுவும் ஒன்று ஆகும். மற்றையது முல்லைத்தீவு கல்வி வலயம் ஆகும். [2] இதன் தற்போதைய பணிப்பாளர் திரு. பி. ரவிச்சந்திரன் ஆவார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "It works under the Ministry of Education, Sri Lanka". Archived from the original on 20 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Divisions". பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
  3. "Director of the zons". பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணுக்காய்_கல்வி_வலயம்&oldid=3558729" இலிருந்து மீள்விக்கப்பட்டது