துது மியான்

வங்காளத்தில் பரைசி இயக்கத்தின் தலைவர்

முசினுதான் அகமது (Muḥsinuddīn Aḥmad;1819-1862), துது மியான் (Dudu Miyan) என்றும் அழைக்கப்படும் இவர், வங்காளத்தில் பரைசி இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1857 ஆம் ஆண்டில் நடந்த இந்தியக் கிளர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

துது மியான்
பிறப்புமுசினுதான் அகமது
1819
மதாரிபூர், வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி
(தற்போதைய வங்காளதேசம்)
இறப்பு1862 (அகவை 42–43)
டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானியா இந்தியா
(தற்போது டாக்கா, வங்காளதேசம்)
அறியப்படுவதுபரைசி இயக்கம், சிப்பாய்க் கிளர்ச்சி, 1857

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அகமது 1819 ஆம் ஆண்டில் வங்காள மாகாணத்தின் மதாரிபூர் மாவட்டத்தில் தாலுக்தார் என்ற வங்காள முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஹாஜி ஷரியத்துல்லா, பரைசி இயக்கத்தின் நிறுவனராவார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு, அகமது தனது பன்னிரெண்டாவது வயதில் மேலதிக படிப்புக்காக அரேபியாவின் மக்காவுக்கு அனுப்பப்பட்டார். இவர் தனது தந்தையிடமிருந்து எந்தவொரு பண உதவியையும் பெறவில்லை என்றாலும், இவர் காலனித்துவ அவுரி தோட்டக்காரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு எதிரான விவசாய இயக்கங்களின் சக்திவாய்ந்த தலைவர் என்பதை விரைவில் நிரூபித்தார்.

இயக்கம் தொகு

தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மியான் இயக்கத்தை மிகவும் தீவிரமான, விவசாயத் தன்மைக்கு வழிநடத்தி அதை ஒரு பயனுள்ள நிறுவன கட்டமைப்பாக உருவாக்கினார். இவரது பார்வையில் நிலமானது உழுபவருக்கே சொந்தமானது. இவர் சொந்தமாக ஒரு நிர்வாக அமைப்பை நிறுவி, ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கலீபாவை (தலைவர்) நியமித்தார். பிரித்தானியர் ஆளும் மாநிலத்திற்குள் ஒரு அரசை உருவாக்குவதே இவரது கொள்கை. இவர் அடக்கியாளும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட விவசாயிகளை போராட வைத்தார். [1] 1838ஆம் ஆண்டில், மியான் தனது ஆதரவாளர்களிடம் ஜமீந்தார்களுக்கு வருவாயை கொடுக்க வேண்டாம் என்று அழைப்பு விடுத்தார். இதன்பிறகு அவுரி தோட்டக்காரர்கள், விவசாயிகளால் அடிக்கடி தாக்கப்பட்டனர்.[2] இதற்கு பழிவாங்கும் விதமாக, நில உரிமையாளர்களும் அவுரி தோட்டக்காரர்களும் மியான் மீது வழக்குகள் தொடுத்து இவரை கட்டுப்படுத்த முயன்றனர். 1838, 1844, 1847 இல் இவர் பல முறை கைது செய்யப்பட்டார். ஆனால் இவரது சமயத்தை பொருட்படுத்தாமல் விவசாயிகள் இவருக்கு ஆதரவு பெற்றதால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்குகளில், இவருக்கு எதிராக நீதிமன்றங்களில் அரிதாகவே சாட்சியளித்தனர்.[3]

இறப்பு தொகு

1857 இந்தியக் கலகத்தின் போது, பிரிட்டிசு அரசாங்கம் இவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து கொல்கத்தாவின் ஆலிப்பூரா சிறையில் அடைத்தது. இவர் 1859இல் விடுவிக்கப்பட்டார். பின்னர், மீண்டும் கைது செய்யப்பட்டு இறுதியாக 1860இல் விடுவிக்கப்பட்டார். 1862ஆம் ஆண்டில், மியான் டாக்காவில் தனது 42-43 வயதில் இறந்தார்.[4]

சான்றுகள் தொகு

  1. U. A. B. Razia Akter Banu. Islam in Bangladesh. E. J. Brill. https://books.google.com/books?id=XyzqATEDPSgC&pg=PA37. 
  2. "The Faraizi Movement". ImportantIndia.com. December 11, 2013. Archived from the original on ஜூன் 27, 2018. பார்க்கப்பட்ட நாள் May 4, 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Hardy. The Muslims of British India. CUP Archive. https://books.google.com/books?id=RDw4AAAAIAAJ&pg=PA56. 
  4. Volume 3, Kenneth W. Jones (1989). Socio-Religious Reform Movements in British India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521249867. https://books.google.com/books?id=8HV4nHv8urgC&q=Dudu+Miyan&pg=PA21. பார்த்த நாள்: May 4, 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துது_மியான்&oldid=3558743" இலிருந்து மீள்விக்கப்பட்டது