துத்தநாகச் சுத்திகரிப்பு

துத்தநாகச் சுத்திகரிப்பு (Zinc refining) என்பது துத்தநாகத்தை உயர் தர சிறப்பு துத்தநாகமாக சுத்திகரிக்கும் ஒரு செயல்முறையாகும். இச்செயல் முறையில் கிடைக்கும் துத்தநாகம் குறைந்தபட்சம் 99.995% தூய்மையானதாகும்.[1] மின்னாற்பகுப்பு செயல்முறைகள் மூலம் துத்தநாகத்தை கரைக்கும் போது இந்த செயல்முறை பொதுவாக தேவைப்படுவதில்லை. ஆனால் துத்தநாகம் உயர் வெப்ப உலோகவியல் செயல்முறைகளால் உற்பத்தி செய்யப்படும் போது இம்முறை தேவைப்படுகிறது. ஏனெனில் உயர்வெப்ப உலோகவியல் செயல்முறையில் கிடைக்கும் துத்தநாகம் 98.5% மட்டுமே தூய்மையானது.

துத்தநாகத்தை தூய்மையாக்க பல்வேறு சுத்திகரிப்பு முறைகள் உள்ளன. ஆனால் பின்னியக்க செயல்முறை மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

மெதுவாக துத்தநாகச் சிதைவு மற்றும் துத்தநாக வார்ப்புகளில் விரிசல் உண்டாக்கும். துத்தநாக அழுகலை தவிர்க்க தொழில் ரீதியாக உயர் தூய்மையான துத்தநாகம் தேவைப்படுகிறது,

பின்னியக்கச் செயல்முறை தொகு

நியூ செர்சி துத்தநாக நிறுவனம் இந்த செயல்முறையை 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது.

முதலாவது நெடுவரிசையில் உள்ள இரும்பு மற்றும் அலுமினியம் மாசுக்கள் அகற்றப்படுவதுடன் ஒப்பிடுகையில் இந்த செயல்முறை துத்தநாகத்தின் குறைந்த கொதிநிலையைப் (907 பாகை செல்சியசு அல்லது 1665 பாகை பாரங்கீட்டு). பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, முதல் நெடுவரிசையில் துத்தநாகம் அதன் கொதிநிலைக்கு மேலே சூடாக்கப்பட்டு ஒரு மின்தேக்கிக்கு உயர அனுமதிக்கப்படுகிறது. இரும்பு மற்றும் அலுமினிய அசுத்தங்கள் திண்மம் அல்லது திரவ வடிவில் கீழே மூழ்கும். ஈயம் மற்றும் காட்மியம் நீராவி அசுத்தங்கள் இன்னும் தங்கி உள்ளன. ஈயத்தை அகற்றுவதற்காக 2-3% நீராவி ஒடுக்கப்படுகிறது. இது ஈயத்தின் பெரும்பகுதியை நீராவியிலிருந்து வெளியேற்றுகிறது; மொத்த உள்ளடக்கத்தில் இது 0.003% மட்டுமேயாகும். இறுதியாக நீராவி காட்மியம் நெடுவரிசையில் செலுத்தப்படுகிறது. அங்கு இது கொதிநிலை துத்தநாகத்தின் கொதிநிலைக்கு கீழே ஓர் இடைநிலை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது, ஆனால் அது இன்னும் காட்மியத்தின் கொதிநிலைக்கு (767 பாகை செல்சியசு) மேலே இருக்கும். துத்தநாகம் ஒரு சுத்திகரிக்கப்பட்ட திரவமாக கீழே வெளியேறுகிறது, காட்மியம் நீராவியாக மேலே வெளியேறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "London Metal Exchange: LME Zinc Physical".

மூலம் தொகு