துத்தநாக பெர்ரைட்டு

துத்தநாக பெர்ரைட்டுகள் (Zinc ferrites) என்பவை துத்தநாகம் மற்றும் இரும்பு (பெர்ரைடு) ஆகியவற்றைச் சேர்த்து செயற்கையாக உருவாக்கும் வரிசைத் தொடர் சேர்மங்களாகும். இவற்றின் பொது வாய்ப்பாடு ZnxFe3-xO4. ஆகும். Zn(NO3)2, Fe(NO3)3, டிரையெத்தனாலமீன் ஆகியனவற்றின் முதிர் கரைசலை ஐதரசீன் முன்னிலையிலோ அல்லது ஐதரசீன் இல்லாமலோ[1] அல்லது இரும்பு ஆக்சைடு மற்றும் துத்தநாக ஆக்சைடுகளை உயர்வெப்பநிலையில் வினைபுரியச் செய்தும் துத்தநாக பெர்ரைட்டு சேர்மத்தை தயாரிக்கமுடியும். சிப்பைனல் (Zn, Fe) Fe2O4 எனப்படும் கனிமம் வெளிர்பழுப்பு நிற திண்மமாகும்[2]. ஒளிர்வு காரணமாக இக்கனிமம் தண்ணீர், அமிலங்கள், அல்லது நீர்த்த காரம் ஆகியவற்றில் கரையாது. துத்தநாக பெர்ரைட்டுகளை நிறமிகளாகப் பயன்படுத்தமுடியும். அதிலும் குறிப்பாக வெப்ப நிலைப்புத்தன்மை தேவைப்படும் பொருட்களுக்கு நிறமியாக இதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, மஞ்சள் இரும்பாக்சைடைக் கொண்டு தயாரிக்கப்படும் துத்தநாக பெர்ரைட்டை 177° செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட பயன்பாடுகளுக்கு பதிலியாகப் பயன்படுத்தமுடியும்[3]. உயர் அரிமானத்தடுப்பு பூச்சாகப் பூசப்படும் போது துத்தநாகப் பெர்ரைட்டு சேர்க்கப்படும் அடர் அளவுக்கு ஏற்ப பாதுகாப்பும் அதிகரிக்கின்றது[4] A recent investigation shows that the zinc ferrite, which is paramagnetic in the bulk form, becomes ferrimagnetic in nanocrystalline thin film format. [5]. மொத்தமாக இருக்கும் போது துத்தநாக பெர்ரைட்டு, நுண்படிக மென்படல வடிவத்தில் பெர்ரி காந்தமாக மாற்றமடைந்து இணை காந்தப்பண்பை வெளிப்படுத்துகிறது. இம்மென்படலங்களை கட்டுப்படுத்தி அதிக அறைவெப்பநிலை காந்தமாக்கல் மற்றும் பெர்ரோகாந்த ஒத்திசைவு அகன்றவரிசையை எட்டமுடிகிறது[6].

மேற்கோள்கள்

தொகு
  1. Andrés Vergés, M.; Martinez, M.; Matijevié, E. (1993). "Synthesis and characterization of zinc ferrite particles prepared by hydrothermal decomposition of zinc chelate solutions". Journal of Materials Research 8 (11): 2916. doi:10.1557/JMR.1993.2916. Bibcode: 1993JMatR...8.2916A. http://www.mrs.org/s_mrs/sec_subscribe.asp?CID=3156&DID=186660&action=detail. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Zinc Ferrites". Nubiola.com. Archived from the original on March 5, 2010. பார்க்கப்பட்ட நாள் 25 March 2010.
  3. "Zinc Ferrite". Hoover Color Corporation. Archived from the original on 15 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 25 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Ayana, Y. M. A.; El-Sawy, S. M.; Salah, S. H. (1997). "Zinc-ferrite pigment for corrosion protection". Anti-Corrosion Methods and Materials 44 (6): 381–388. doi:10.1108/00035599710367681. 
  5. Bohra, M.; Prasad, S.; Kumar, N.; Misra, D. S.; Sahoo, S. C.; Venkataramani, N.; Krishnan, R. (2006). "Large room temperature magnetization in nanocrystalline zinc ferrite thin films". Appl. Phys. Lett. 488: 262506. doi:10.1063/1.2217253. Bibcode: 2006ApPhL..88z2506B. 
  6. Bohra, M.; Prasad, S.; Kumar, N.; Misra, D. S.; Sahoo, S. C.; Venkataramani, N.; Krishnan, R. (2006). "Large room temperature magnetization in nanocrystalline zinc ferrite thin films". Appl. Phys. Lett. 488: 262506. doi:10.1063/1.2217253. Bibcode: 2006ApPhL..88z2506B. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_பெர்ரைட்டு&oldid=3587237" இலிருந்து மீள்விக்கப்பட்டது