துன்குவாங் கையெழுத்துப் பிரதிகள்

துன்குவாங்கின் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட நடுக்காலக் கையெழுத்துப் பிரதிகளின் ஒரு சேகரிப்ப

துன்குவாங் கையெழுத்துப் பிரதிகள் (Dunhuang manuscripts) என்பவை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனாவின் துன்குவாங்கில் உள்ள மொகாவோ கற்குகைககளில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான மத மற்றும் மதச்சார்பற்ற ஆவணங்களின் தொகுப்பு ஆகும். 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி வரையிலான காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த கையெழுத்துப் பிரதிகள் வரலாறு மற்றும் கணிதம் முதல் நாட்டுப்புறp பாடல்கள் மற்றும் நடனம் வரையிலான பல்வேறுபட்ட தகவல்களைக் கொண்டிருந்தன. இவற்றில் பல மதம் சார்ந்த ஆவணங்களும் அடங்கும். எனினும் அவற்றில் பெரும்பாலானவை புத்த மதத்தைச் சார்ந்தவையாகும். எனினும் தாவோயியம், நெசுத்தோரியக் கொள்கை, மற்றும் மானி சமயம் ஆகிய மதங்கள் சார்ந்த ஆவணங்களும் கிடைக்கப்பெற்றன. பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகள் சீன மொழியில் எழுதப்பட்டவை ஆகும். கோடனிய மொழி, சமசுகிருதம், சோக்டிய மொழி, தாங்குடு மொழி, பாரம்பரியத் திபெத்தியம், பழைய உய்குர் மொழி, எபிரேயம் மற்றும் பழைய துருக்கிய மொழிகளிலும் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இங்கு கிடைத்துள்ளன.[1] வரலாறு, மத ஆய்வுகள், மொழியியல் மற்றும் கையெழுத்துப் பிரதி ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான துறைசார்ந்த கல்வி ஆய்வுகளுக்கு இந்த கையெழுத்துப் பிரதிகள் முக்கியமான ஆதாரங்களாக விளங்குகின்றன.[2]

துன்குவாங் கையெழுத்துப் பிரதிகள் மின்னுரையாக்கப்படுதல்

வரலாறு

தொகு

சூன் 25, 1900ஆம் ஆண்டு தாவோயியத் துறவி வாங் யுவான்லுவால் இந்த ஆவணங்கள் ஒரு மூடப்பட்டு முத்திரையிடப்பட்ட குகைக்குள் கண்டெடுக்கப்பட்டன.[3] 1907 ஆம் ஆண்டு முதல் அவர் இந்த ஆவணங்களை ஆரல் ஸ்டெயின் மற்றும் பால் பெல்லியட் உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த மேற்குலக நாடு காண் பயணிகளுக்கு விற்க ஆரம்பித்தார். ஜப்பானிய, உருசிய மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நாடு காண் பயணிகளும் இந்தக் கையெழுத்துப் பிரதிகளின் சேகரிப்புகளைப் பெற்றனர்.[4] அறிஞர் மற்றும் பழம்பொருள் திரட்டுபவரான லுவோ சென்யுவின் முயற்சிகளின் காரணமாக பெரும்பாலான சீனமொழிக் கையெழுத்துப் பிரதிகள், மொத்த கையெழுத்துப் பிரதிகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு, 1910 ஆம் ஆண்டு பெய்ஜிங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவை தற்போது சீன தேசிய நூலகத்தில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான திபெத்திய மொழி கையெழுத்துப் பிரதிகளின் பக்கங்கள் துன்குவாங்கிலேயே விடப்பட்டன. அவை தற்போது அப்பகுதியில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் உள்ளன.[5] மேற்குலக அறிஞர்களால் விலைக்குப் பெறப்பட்ட ஆவணங்கள் தற்போது பிரித்தானிய நூலகம் மற்றும் பிப்ளியோதெக் நேஷனல் டி பிரான்ஸ் போன்ற நிறுவனங்களில் உலகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து கையெழுத்துப் பிரதிகளின் சேகரிப்புகளும் தற்போது சர்வதேசத் துன்குவாங் திட்டத்தின் கீழ் மின்னுரையாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இணையத்தின் மூலம் காணமுடியும்.

உசாத்துணை

தொகு
  1. Jacques Gernet (31 May 1996). A History of Chinese Civilization. Cambridge University Press. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-49781-7.
  2. Ponampon, Phra Kiattisak (2019). Dunhuang Manuscript S.2585: a Textual and Interdisciplinary Study on Early Medieval Chinese Buddhist Meditative Techniques and Visionary Experiences (in ஆங்கிலம்). Cambridge: University of Cambridge. p. 14. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  3. Wenjie Duan (1 January 1994). Dunhuang Art: Through the Eyes of Duan Wenjie. Abhinav Publications. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-313-7.
  4. Paragraph 1 in Neil Schmid "Tun-huang Literature", chapter 48 in Mair 2001.
  5. "Tibetan Dunhuang Manuscripts in China" in The Bulletin of the School of Oriental and African Studies 65.1 (2002): 129–139. | "The Whereabouts of the Tibetan Manuscripts from Dunhuang". 2007-07-26.

வெளி இணைப்புகள்

தொகு