மானி சமயம் (Manichaeism) (/ˌmænɪˈkɪzəm/;[1]தற்கால பாரசீக மொழியில் آیین مانی Āyin-e Māni; சீனம்: பின்யின்: Jiào) சாசானியப் பேரரசில், பாரசீகரான மானி என்பவர், கிபி மூன்றாம் நூற்றாண்டில் துவக்கத்தில் இச்சமயத்தை நிறுவினார்.[2][3][4]

பாரசீக பேரரசில் மானி சமயச் சின்னத்தின் படம்
நட்சத்திரகளுடன் கூடிய மானி சமயக் கோயிலின் வரைபடம்
மானி சமயத்தை நிறுவிய மானி
கிபி 300 - 500 வரை மானி சமயம் பரவிய பகுதிகள்

நன்மை, தீமைகளால் சூழ்ந்த இவ்வுலகத்தின் மதிப்பு கோட்பாடு , நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கும் இடையேயான போராட்டங்கள், ஆன்மிக ஒளிக்கும், இருளுக்கும் உள்ள வேறுபாடு, லோகாதய பொருட்களால் ஆன இருள் சூழ்ந்த உலகம் ஆகியவற்றை மானி சமயம் கூறுகிறது.[5]

அரமேயம் பேசிய பகுதிகளில் மானி சமயம் வேகமாக பரவியது. [6] மானி சமயம் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. மானி சமய வழிபாட்டுத் தலங்கள், சாத்திரங்கள், தூரக் கிழக்கில் சீனாவிலும், மேற்கில் உரோமைப் பேரரசிலும் காணப்படுகிறது.[7] இசுலாம் பரவுதற்கு முன்னர், மானி சமயத்தின் பெரும் எதிரி கிறித்தவம் ஆகும். கிபி 14-ஆம் நூற்றாண்டில் மானி சமயம், தென் சீனாவில் நலிவடைந்து மறைந்தது.[8]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "manichaeism". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. "Mani (Iranian prophet)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 4 October 2013.
  3. "Manichaeism". Encyclopædia Britannica. Archived from the original on 3 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Manichaeism". New Advent Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 4 October 2013.
  5. "COSMOGONY AND COSMOLOGY iii. In Manicheism". Encyclopædia Iranica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-24. [I]n Manicheism the world was a prison for demons...
  6. Jason BeDuhn; Paul Allan Mirecki (2007). Frontiers of Faith: The Christian Encounter With Manichaeism in the Acts of Archelaus. BRILL. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-16180-1. https://books.google.com/books?id=JQd8b5s5QBUC&pg=PA6. 
  7. Andrew Welburn, Mani, the Angel and the Column of Glory: An Anthology of Manichaean Texts (Edinburgh: Floris Books, 1998), p. 68
  8. Jason David BeDuhn The Manichaean Body: In Discipline and Ritual Baltimore: Johns Hopkins University Press. 2000 republished 2002 p.IX

நூல்களும், கட்டுரைகளும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மானி சமயம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானி_சமயம்&oldid=3717053" இலிருந்து மீள்விக்கப்பட்டது