துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்

துன்னாலை புளியங்கியான்  பிள்ளையார் கோவில்இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள துன்னாலை எனும் ஊரில் உள்ளது. இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக பிள்ளையார் உள்ளது

துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்
துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில் is located in இலங்கை
துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்
துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°47′06″N 80°13′46″E / 9.785128°N 80.229409°E / 9.785128; 80.229409
பெயர்
பெயர்:துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கூகுள் படத்தில்

அமைவிடம்

தொகு

யாழ்குடாநாட்டின் வடமராட்சியினதும் துன்னாலையினதும் மிகவும் முக்கிய நுழைவாயிலில் பேழை வயிற்று சிதம்பர சிவ விநாயகராக எழுந்தருளியிருப்பவர் புளியங்கியான்  பிள்ளையாராவார். நரசிம்ம வர்மன் (அரசன் ) படையெடுத்த பின்பு சேனாதிபதியாகவிருந்த  பரஞ்சோதி முனிவரால் தென்னிந்தியாவுக்கு விநாயகர்  கொண்டு வரப்பட்டாலும் ஒல்லாந்தர்,போர்த்துக்கேயர் இந்த நாட்டுக்கு புக முன் குடிசையில்   விருட்ஷத்தின் கீழ் வைத்து விளக்கேற்றி வந்த ஓர் ஆலயமாகும்.

ஆலய வரலாறு

தொகு

ஆரம்பத்தில் வல்லிக்கொல்லன் வேலகொல்லன்  என பெயர் சொல்லிக் குறிப்பிடுமளவுக்கு கொல்லர் வம்சத்தினாலும் ஆதரித்து வழிபட்டு வந்த ஸ்தலமாகவும்  இருந்தது எனச் சுவடிகள் மூலமும் செவி வழிவந்த கதைகளின் மூலமும் ஊகித்து உண்மையென கருதப் போதிய இடமுண்டு. மேற்குறிப்பிட்ட வம்சத்தினரின் 6 ம் சந்ததியாகக் கரவெட்டி கிழக்கில் வாழ்கின்ற திருமதி. கிட்டினர் சின்னம்மா - திரு.வேலுப்பிள்ளை செல்லத்துரை ஆகியவர்களும் மேற்கூறியதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். பிள்ளையாருக்கு அரசமரமாகும் ஆனால் இங்கு வளர்வது வில்பமரமே.

 
முன் தோற்றம்

ஆரம்பத்தில் இவ்வாலயத்தில் கிழக்கே துன்னாலை அதாவது பருத்தித்துறை - சாவகச்சேரி வீதிக்குக் கிழக்கில் வாழ் பகுதி மக்களாலும் ,மற்றைய கிரான் ஊரிக்காடு என்ற பெயருடைய இடத்து மக்களாலும் (இப்பொது அக் குடிகளில்லை ) வழிபட்டமைக்குச்  சான்றுகள் உண்டு.அதற்கு கிழக்கே செட்டிகாடு என்னும் இடம் வலிகண்டி வரைக்கும் பரந்து காணப்படும் ஊர் மனையாகும் . அங்கே மக்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள் .அவர்களும் இவ்வாலயத்தில்  திருப்பணி வேலை செய்து வழிபட்டு வந்துள்ளார்கள்.அத்துடன் செட்டிக்காட்டில் வைரவர் கோவிலைக் கட்டி வழிபட்டமைக்கும் சான்றுகள் உண்டு. இப்பொழுதும் அவ் வைரவர் கோவில் உண்டு.

அத்துடன் செட்டிகாடு என்னும் பகுதிக்கு வடகிழக்குத் திசையில் வல்லிபுர ஆழ்வார் கோயிலை அண்டி சாயக்காரர் வாழ்ந்ததற்கும் சான்றுகள் உண்டு.

 
பழைய முகப்பு
 
பின்புறம் கூகுளில்

இப்பொழுது குறுக்கட்டு பிள்ளையார் என வழங்கப்படும் ஸ்தலத்தில் கேணிக்கருகில் இப்பொழுது பிரதிஷ்டை செய்திருக்கும் பிள்ளையார்  ஓர் மரத்தின் கீழ் வைத்துப் பூசிக்கப்பட்டு வந்தது என்றும்,மாடுகள் மேய்த்து வந்த வல்லிநாச்சி விஷ்ணு சக்கரத்தை பெற முன் இப்பிள்ளையாரை  வணங்கி வந்தார் என்றும் அவர் வழித்தோன்றலாகிய வராத்துப்பிள்ளையில் தற்போது வாழ்ந்த  திருமதி ப.செல்லத்துரை என்னும் பெண்மணி கூறியுள்ளார் . (வல்லிநாச்சியார் வழித்தோன்றல் )இச் சிதம்பர விநாயகர் கோவில் முதலில் ஸ்தாபிக்கப்பட்டதற்கு இன்னுமொரு சான்று உண்டு.அல்வாய்  இலக்கடி என்னும் இடத்தைச் சேர்ந்த எஸ்.வெள்ளிப்பிள்ளை என்னும் ஒருவர் அனுராதபுரத்தில் வாழ்ந்த காலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடந்ததனால் தண்டனையிலிருந்து தன்னைக் காப்பாற்றி கொள்வதற்காகச் செய்யப்பட்ட  நேர்த்திக் கடனுக்காக ஆலயத்தை சுற்றி மதில் கட்டினார் , என்றும் கூறும்பொழுது அல்வாய் வரைக்கும் வணக்கத்துக்குரிய ஆலயமாக இருந்திருக்கிறது என்று கருதவும் இடமுண்டு .

அதோடு பிள்ளையார் கர்ப்பகப்  பீடத்திற்கு மேலும் வைரவர் சந்நிதியின்  கலசங்களைக் கொண்டும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது ,என்பதையும் உறுதிப்படுத்தலாம். காங்கேசன்துறை வீதியிலுள்ள திரு.எல். கெங்காதரன் என்னும் சிற்பாச்சாரியார் இக்கலசங்கள் ஆகக்குறைந்தது இருநூறு , முந்நூறு ஆண்டுகளுக்கு நிறைபெறக்கூடியதாக  ஆக்கப்பட்ட கலசங்கள் என்று மன உறுதியோடு புகழ்ந்தார்  இப் புராதன கலசங்களிலிருந்தும் புளியங்கியான்   சிதம்பர  சிவ விநாயகர் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததென அறுதியிட்டுக்   கூற முடியும்.

அத்துடன் புலோலி தெற்கு,துன்னாலை முதலிய இடங்களில் வசிப்பவர் ஸ்தாபித்த பழைய ஆலயமாகும் . பின்பு புலோலி வாழ் மக்கள் முறாவில்  பிள்ளையார் கோவில் ஒன்றைத் துன்னாலை எல்லையில் ஸ்தாபித்து வணங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் புலோலி உதய கதிர்காமாப்பிள்ளையார் திருப்பணிச்சபை  புளியங்கியான் திருப்பணிக்குப் பண உதவி செய்ததிலிருந்தும் புலோலியாருக்கும்  ஆரம்பத் தொடர்பு இருந்தது என்பதை ஒரு விதத்தில் ஊகிக்கலாம்.

ஐங்கரன் பெருமைகள்

தொகு
 
பின்புறம் கூகுளில்

இந்துக்கள் அனுஷ்ட்டிக்கும் முக்கிய  விரதங்களுக்குள் ஒன்றாக விளங்குவது விநாய சதுர்த்தி . இதனை கணேஷ சதுர்த்தி எனவும் வழங்குவர். இது ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறையின் 5ம் நாள் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது . விநாயகருடைய யானைமுகம்  ஞானத்தைக்  குறிப்பதால் வலிமை,விவேகம்,ஞானம் இவற்றை வேண்டி இவ்விரதத்தை விசேட பூசை வழிபாடுகளுடன் இயற்றி வழிபடுவர் மக்கள் .

விநாயகக் கடவுளின் பிறப்பைப் பற்றி பலவகையான புராணக் கதைகள் காணப்படுகின்றன. ஒரு சமயம் சிவபெருமான் வேட்டையாடச் சென்றிருந்த போது பார்வதி தேவியார் நீராட நினைத்து வாயிலிற் காவற்காரன் ஒருவனைத்  தாமே சிருஷ்டித்துக் காவலுக்குக் கமர்த்தி வைத்து நீராட சென்றார் . விரைவிலே வேட்டையை முடித்துத் திரும்பிய சிவபெருமானை வாயிலில் இருந்த காவற்காரன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை .கோபத்திற்குள்ளான சிவபெருமான் அக்காவற்காரனின் தலையை துண்டித்து விட்டார் . பார்வதி தேவியார் வெளியே வந்து பார்த்த போது காவலாளியின்  தலை துண்டிக்கப்பட்டிருந்ததைக் கண்டு,நடந்தவற்றைக் கூறினார். சிவபெருமான் அக்காவலாளியை உயிர்ப்பிக்கக் கருதி வடக்கே சென்று ,முதலிலே காட்டிற் காணும் மிருகமொன்றின் தலையை கொண்டுவரும்படி தனது ஏவலாளரை அனுப்பினார் . அங்கனம் சென்ற ஏவலாளர் முதலிற் பார்த்ததாக யானையின் தலையைக் கொண்டு வந்து பொருத்தினர் .இவ்வகையில் உருவானவரே  விநாயகர் என வட நாட்டவர் கூறுகின்றனர். பார்வதி  தனது காவலாளியை   உருவாக்கிய நாள் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தி நாளாகும். இதனால் வடநாடெங்கும்  யாகங்களோடு கூடிய விசேட வழிபாடுகள் இத்தினத்தில் நடைபெறுகின்றன.

விநாயகா் உருவானதற்கு வேறொரு கதையும் கூறப்படுகின்றது . பார்வதி தேவி குழந்தையொன்று வேண்டுமென ஆசைபட்டுப் பொம்மை ஒன்றை உருவாக்கினார்.அவ்விடம் வந்த விஷ்ணு ,அவளுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணி அதற்கு உயிர் கொடுத்தார். பரமேஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார் .தேவர்கள் அந்த அழகான குழந்தையை காண வருகை தந்தனர் .சனீஸ்வரன் தனது கண்களாற்  குழந்தையைப் பார்த்த அளவில் குழந்தையின் தலை விழுந்து விட்டது . வேறு வழியின்றி வடக்கு நோக்கித் துயிலும் எந்த மிருகத்தின் தலையையாவது கொண்டுவரும்படி சிவபெருமான் கட்டளை இடவே, முன்னர்  கூறியது போன்றே யானையொன்றின் தலை கொண்டு வரப்பட்டுப் பொருத்தப்பட்டு, யானைத் தலை கொண்ட விநாயகர் உருவாகினார்.

'பிள்ளையார் பெருங்கதை ' மேலும் சுவாரஷ்யமாகப் பிள்ளையார்   பிறப்பைக் கூறுகின்றது. சிவபெருமான், தன்னுடைய கட்டளைப்படி பூவுலகிற் பெண்ணாக பிறந்த பார்வதியை மணஞ் செய்து வரும்வழியில்,களிறும் பிடியும் விளையாடுவதைக் கண்டு 'பாராதே வா ' எனப் பார்வதிக்குக் கூறியதாகவும் , பார்வதி உடனே திரும்பிப்  பார்த்து இவ்வகையில் நாமும் விளையாடுவோம் எனக் கூறியபோது ,சிவனும் உடன்பட்டமையால் தோன்றியவரே பிள்ளையார் எனக்கூறுகின்றது . இவ்வாறாகப் பிள்ளையாரின் தோற்றத்திற்கு வெவ்வேறான கதைகள் பல கூறப்படுகின்றன .

ஆக்கம்  - பண்டிதர் திருமதி.சந்தனா  நல்லலிங்கம்

கும்பாபிஷேக முறைகளும்  விளக்கமும்

தொகு

அநாதிமலமுத்த சித்துருவாகிய பரம்பொருள் கற்பனை கடந்த சோதியாகினும், அநாதிமலை பெத்தர்களாகிய  ஆன்மாக்கள் வணங்கிப்போக மோஷங்களை அடைய ஆலயத்தில் நிறுவப்படும் சிவலிங்கத் திருவுருவில் கருணையே உருவாக்கும்படி பிரார்த்தித்து  அபிஷேகித்தலே கும்பாபிஷேகமாகும் .

"கும்பாபிஷேகம் " என்பது குடமுழுக்கு, "குடநன்னீராட்டு விழா " என்று சொல்லுவார்கள், இது பிரதிஷ்டை என்றும் கூறப்படும். இது நான்கு வகைப்படும். அவையாவன :

  1. ஆவர்த்தம்
  2. அனாவர்த்தம்
  3. புனராவர்த்தம்
  4. அந்தரீ தகம்

ஆவர்த்தம் :- புதிதான ஓர் இடத்தில்  சிவலிங்கம் அன்றி மூலமூர்த்தியை வைத்துப் பாலபிரதிஸ்டை செய்து பூஜித்துப் புதிதாகக் கோயில் கட்டி, பாலாலய மூர்த்தியைக் கும்பத்தில் எடுத்துக் பின்னர் மூலஸ்தானத்தில் இருக்கும் மூர்த்தியில்  சேர்த்து அபிஷேகம் செய்வதாம்.

அனாவர்த்தம் :-வெகுகாலத்துக்கு முன் கோயில் கட்டி பூசையில்லாமல் அழியவிட்டும், சீர் குலைந்தும் இருந்து ,முன்போல் அவைகளைத் திருத்தி ஆலயம் கற்பித்துக்  கும்பாபிஷேகம்  செய்தலாம்.

புனராவர்த்தம் :-கர்ப்பக்கிரகம்,விமானம்,பிரகாரம் ,கோபுரம்,பலிபீடம் முதலியவைகளில் பழுது ஏற்படுதலும்,அட்டபந்தனத்தில்  பழுது நிகழ்ந்தாலும்,வர்ணம் அழிந்து இருந்தாலும்,பாலாலயம் செய்து ஆலயத்தைப் புதுப்பித்து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம்  செய்தலாகும்.

அந்தரீ தகம்  :- ஆலயத்தில் சேரன்,சண்டாளன்,நாய், முதலியன உட்சென்று  தீண்டியதன் காரணமாக மூர்த்தியின் பிரத்தியங்கம்,உபாங்கம் போன்றவைகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அவைகளைத் திருத்தி உடனே செய்வதாகும். இதில் அந்தரீகப் பிரதிஷ்டைக்கு நாள்,நட்ஷத்திரம் பார்க்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழத்தில் இப்போது நடக்கும் கும்பாபிஷேகம் அனாவர்த்தம் என்று சொல்லப்படும். அதற்கு :

  1. அனுஞ்ஞை                                                                       
  2. திரவிய விபாகம்                                                                   
  3. ஆசாரியவர்ணம்         
  4. கணபதி பூஜை   
  5. கிராமசாந்தி  
  6. பிரவேச பலி      
  7. திசா ஹோமம்  
  8. இரட்சோக்கிர  ஹோமம்    
  9. வாஸ்து சாந்தி  
  10. ஆயுஷ்மூர்மம்                 
  11. தனபூஜை                                                       
  12. கிரகமகம்
  13. கோபூஜை      
  14. விப்பிரபோஜனம்                                     
  15. மிருத்சங்கிரகணம் 
  16. நயனோன்மிலனம்    
  17. தான்யாதிவாசம் 
  18. ஜலாதிவாசம்
  19. அங்குரார்ப்பணம்
  20. ரக்ஷபந்தனம்

அனுஞ்ஞை :- இறைவணக்கம் செய்து சர்வ சாதகரிடத்திலும்,பரம்பொருள் இடத்திலும் நான் குறித்த காலத்தில் இந்த மகத்துவமான கும்பாபிஷேகத்தைச் செய்ய உத்தரவு தரவேண்டும் என்று வணங்கி உத்தரவு கேட்பதாம்.

தனபூஜை :- புண்ணிய வசத்தால் கிடைத்த திரவியத்தைப் பூஜை செய்தலாகும்.

திரவிய விபாகம்  :- பூஜை செய்த திரவியத்தை ஒருபாகம் ஆலயக் கட்டட வேலைக்கும் ,இரண்டாவது பாகம் நித்திய பூஜை,மாசாந்த விசேட நட்சத்திர பூஜை,உற்சவம்,ஆபரணாதிகட்கும் இராமாதிவாங்கவும் ,மூன்றாவது பாகத்தை பதினொருபாகம் செய்தல் வேண்டும். அவை :

  1. யாகம் கட்டுதல் முதலானவற்றிற்கு  -    2 பாகம்
  2. அபிஷேக திரவியத்திற்கு                         -    1 பாகம்
  3. ஆசாரிய தெட்ஷனை                                 -    2 பாகம்
  4. மூர்த்திகட்கு                                         -    1 பாகம்
  5. வேதாதி - திருமுறைகட்கு                       -     1 பாகம்

மேற்கூறிய பாகமாக பிரித்து முறையே செலவு செய்தல்  திரவிய பாகமாகும்.

ஆசாரியவர்ணம் :- பிரதான ஆசாரியரையும்,சர்வசாதகரையும் வணங்கி இத்திரவியத்தைக் கொண்டு மஹாகும்பாபிஷேகம் செய்து இறையருளைப் பெற்றுத்தர வேண்டும் என்று எசமான் குருவை வழிபடுதலாகும் .

கணபதி பூஜை :- எவ்வகையினராலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்தல் வேண்டும் ; செய்யாவிடில் அவர்களின் காரியத்தை இடையூறு செய் என்று இறைவன் கட்டளை என்பது "என்னரேயாயினும் " என்ற திருவிளையாடற் புராணத்தில் விளங்குகின்றது .ஆகவே இங்கு தொடங்கிய மஹா கும்பாபிஷேகம் இடையூறு இன்றி நிறைவேற விநாயகப் பெருமானுக்குப் பூஜை,அபிஷேகம்,ஹோமம்,செய்து முதலில் பிரதான சிவாசாரியார் வழிபடுதல்.

கிராமசாந்தி :- "சர்வலோக இதம் புண்ணியம் வட்சியே கந்து சடானன கிராம நூதன காலேது ஷேத்திரவா மந்திரேவிவா பிரதிஷ்டோத்துவ காலேச பூஜாம் கருத்துவாவிசேஷவதா  " என்று காரணாகமம் கூறுகிறது .விளக்கம் சகலலோக சுகத்துக்கும் ,புதிதான பட்டினம் கிராமங்களில் உள்ள அசுர,ராட்ஷத ,பிசாச பிரம ராட்ஷதர்களைத் திருப்தி செய்து சந்தோஷப்படுத்தி,கிராம அதி தேவதையான வைரவரை பூஜித்தலாகும்.

பிரவேச பலி :- நாம் பிரவேசம் செய்து மகா கும்பாபிஷேகம் செய்யும் இடத்தில்  உள்ள எட்டுத்திக்குகளிலும் வசிக்கின்ற இயக்கர் ,இராட்ஷதர் ,பிசாசர் ,பிரம இராட்ஷதர் ,பூத்ர் ,காளி ,சரளி, வைரவர் முதலிய தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி அவர்களை முறையே கடல்,மலை,வனம்,நதி மயானம் முதலிய இடங்களிற் சென்று சுகமாய் வீற்றிருங்கள்  இது சிவன் கட்டளை எனக் கூறித் திருப்தி செய்தலாம் .இது மஹாகும்பாபிஷேகம்,திருவிழா,புதுவீடு குடிபுகல்  போன்ற காரியங்களிற் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன .

திசா ஹோமம் :- நான்கு திக்குகளில் முறையே பாசுபதாஸ்தம் ,அகோராஸ்திரம்,பிரத்தியங்கிராஸ்திரம் , சிவாஸ்திரம் முதலியவர்களைப் பூசித்துக் காவல் செய்யும் படி கட்டளை இடுதலாகும் .

இரட்சோக்கிர  ஹோமம் :- அசுர ராட்ஷதர்களின் தொல்லை நீங்குவதற்காக மூன்று மேடைகள் அமைத்து ,நடுவில் கும்பம் வைத்து அதில் ரட்சோக்கிர தேவதையை வடவா முகாக்கினிக்குச் சமமாகப் பாவித்துப் பூசை செய்து ,அதன் தென்புறத்தில் வெள்ளை வஸ்திரம் இட்டு ,தேங்காய் ஒன்று வைத்து ,வடக்குப் பக்கத்திற் சிவப்பு வஸ்திரம் வைத்து அதன் மேல் வாள் ஒன்று வைத்து ,தேங்காயில்  சிவனையும் வாளில் கட்கேசுவரனையும் ,வாளைச்சுற்றி அசிதாங்கபைரவர் ருருபைரவர் சண்ட பைரவர் ஆகிய எண்மரைப் பூசித்து ,அவர்களுக்கு உள்ள திரவியங்களாலும் சமித்தாலும்  ஹோமம் செய்து,சம்யோசித்துக் கும்பஜலத்தை ஆலயத்தைச் சுற்றித் தெளித்தலாகும் .

வாஸ்து சாந்தி :- பூமியானது அசத்தாக,ஜடசம்பந்தம் உள்ளதனால் அதை நீக்கிச் சத்பாவம் உண்டாவதற்குச்  செய்வது . அசுத்த சொரூபமான பூமியை பாலாக்கினியால்  தகித்துப் பின்பூமிக்கு அதிபதியான பிரமாவின் மூச்சுக்காற்றினாற் சோதிரூபமாகிச் சுத்தம் செய்வதாம் .நீற்றுப்பூசணிக் காயை பூமியின் வடிவமாகத் தியானித்து ,அதன் விதைகளை அண்டங்களாக நினைத்து, எல்லாவற்றையும் ஹோமம் செய்து ,பின் பூமிக்கு அதிபதியான பிரம்மாவின் கட்டளையினாற் பரிசுத்தமானதாகப் பாவித்தல் வாஸ்து சாந்தியாம் .இச்சாந்தி கும்பாபிஷேகம் பாலஸ்தாபனம்,யாக மண்டப கல்பனம் , கோபுரம்,தடாகம் ,வீடு ,உற்சவம்  போன்ற இடங்களில் அவசியம் செய்ய வேண்டும் .

ஆயுஷ்மூர்மம் :- குருமார் செய்து கொள்ளும் தசவித ஸ்நானமாம்.

கோபூஜை :- பசுமாடு , கன்று கட்டுதல்.

விப்பிரபோஜனம் : - வேதம் அறிந்த பிராமணர் பிருதுவி முதல் சுத்ததத்துவம் வரையுள்ள எல்லாத் தத்துவங்களையும் சுத்தமாக்குகின்றேன் ; ஹோமம் செய்கின்றேன் ; இது நன்கு சுத்தி அடையட்டும் என்று சிதாக்கினியில்  ஹோமம் செய்கின்ற பாவனையில் போசனம் செய்வித்தலால் அந்த இடம் சுத்தியாகும்.

மிருத்சங்கிரகணம் :- கிராமத்துக்கு சாந்தியையும் தேச நன்மையடைவதையும் நினைந்து பூமாதேவியைப்  பிரார்த்தித்து இந்தப் பூமி கண்டங்களாகப் பிரிந்து இருப்பதால் ஒவ்வொரு  கண்டத்துக்கும் பூசை செய்து , பிரார்த்தித்து ,ஞானயாகம் செய்ய முளையிடுவதற்காக மண்வெட்டியை சிவாஸ் திரமாகப் பூசித்து,பூமா தேவியின் வயிற்றில் மூன்று அல்லது ஐந்து முறை மண்ணை எடுத்தலாம் . எடுத்த தோஷம் நீங்க அந்த இடத்துக்கு வேறு மண் போட்டுச் சப்தவாரிதி கும்பத்தால் அபிஷேகம் செய்தலாம் .

அங்குரார்ப்பணம் :- முளையிடுதல் இந்தப் பூமியானது முன்னர் அமிர்தத் தால் நனைந்து சுத்தமானது .ஆகையால் உலகச் சேமத்தின் பொருட்டு நெல் முதலிய நவ தானியங்களைப்  பாலில் ஊறவிட்டு "ஒசதி சூக்தம் " செபித்துச் சந்திரனை வணங்கி முளையிடுதலாகும்.

ரக்ஷபந்தனம் :- காப்புக்கட்டுதல்,குழந்தை வருத்தம் தீர,மாதா மருந்துண்ணல் போல, உவக சேமத்திற்காக ஆசாரியார் எடுத்த காரியம் செவ்வனே நிறைவேற இடையூறுகள் தடுக்கா வண்ணம் இறைவியின் கர்ப்ப நாடியில் நின்றும் உண்டான நாகராசனைப் பூசித்து கையில் கங்கணம் கட்டுதலாம்.

ஆக்கம்பிரதிட்டபூஷணம் நயினை ஐ .கைலாசநாதகுருக்கள்

துன்னாலை புளியங்கியான்  பிள்ளையார் கோவில் தகவல்கள்

தொகு

இவ்வாலயம் பற்றிய பொதுத் தகவல்களை போத மக்களும்,எதிர்கால இளம் சந்ததியினரும்,அடியார்களும் அறிய வேண்டும்: அறிந்திருக்க வேண்டும் என்று பெரு ஆய்வுகளின் பின் தெரிந்த தகவல்களை விளம்பரப்படுத்துகின்றேன்.

கோயில் பெயர்                -    புளியங்கியான் பிள்ளையார் ஆலயம்

மறுபெயர்கள்                  -     சிதம்பரத்துப்  பிள்ளையார் ஆலயம் ,சிவ விநாயகர் ஆலயம்

சுவாமியின் திருநாமம்   -  சிவ விநாயகர்

ஏனைய சுவாமிகள்      -    தெய்வானை வள்ளி சகிதம் முருகப் பெருமான்,வைரவர், மூஷிகம்,பலிபீடம்,நாகதம்பிரான்,நவகிரகங்கள்,

தம்பப்பிள்ளையார் கருங்கல்லிலானது. (தெய்வானை வள்ளி சகிதம் முருகன், வைரவர், விக்கிரகம்,

நாகதம்பிரான்,நவகிரகங்கள் 11.09.2002 ல் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டது.)

பரிவார மூர்த்திகள் - சிவ விநாயகர்,தெய்வானை வள்ளி சகிதம் முருகன் அங்குசம் - பஞ்சலோகத்தாலானது. 11.09.2002ல் நடந்த

மஹா கும்பாபிஷேகத்தன்று இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது .

தல விருட்ஷங்கள்       - வில்பம்,புன்னை ,மருது ,ஆல்

மூல விக்கிரகங்கள் -  6ம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது .சிவாலயம் என ஸ்தாபிக்க எண்ணியும் தகுந்த

சிவாச்சாரியாரின்மையால்   சிவ விநாயகர் ஆலயம் ஆனது .வெல்லிக்கந்தோட்ட பிள்ளையார் கோவிற்

பின் வீதியில் வாழ்ந்து வந்த காசிலிங்க ஐயர் அவர்களால் இவ்வாலயத்திற்குக் கொண்டு வரப்பட்ட

சிவலிங்கம் கட்டைவேலி பிரதிஷ்டை செய்யப்பட்ட தென்று அறிய முடிகின்றது . ஆனால் இங்கு

வைத்துப் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரித் தாயின் விக்கிரகத்தை அக்காலத்தில் வாழ்ந்த மாப்பாணர்

சின்னத்தம்பியார் என்னும் அடியாரால் கொண்டு செல்லப்பட்டு அவர் சொந்தவீட்டில் பூஜிக்கப்பட்ட

அம்மன் அவவேதான்  வீட்டம்மன் என்ற பெயரில் மடப்பள்ளி ஆலயமாக துன்னாலை வடக்கில்

இருக்கின்றது .

ஆலயம் - தனிச் சுண்ணாம்புக் கட்டிடமாகவும்  இந்தியா- கேரளச் சிற்பாச்சாரியாராக இரட்டைப் பஞ்சாங்கமுறையில்

சிவ ஆலயத்திற்குரிய அமைப்பில் கர்பகப் பீடம் அமைத்து இருந்தது . காலத்தினால் சிதைவுற்று  2001/2002ம்

ஆண்டளவில் பொது மக்களின் பணத்தினாலும்  அரசாங்கத்தின் நன்கொடையினாலும் முற்றாகப்   புதிதாகக்

கருவறை,வசந்த மண்டபம்,முருகன் சந்நிதி,யாகஅறை ,வைரவர் சந்நிதி,நவக்கிரக சந்நிதி,மணிக்கூடு

கோபுரம் யாவும் அடங்களாகத் திருப்பணி வேலை செய்யப்பட்டு 11.09.2002ல் கும்பாபிஷேகம்

செய்யப்பட்டுள்ளது.கர்பகப்பீடம் இரட்டைப் பஞ்சாச்சர முறைப்படியே செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்கள்

  1. வெள்ளையனை முழங்கிய வயல் - நெற்பரப்பு - 38 3/4
  2. குசவன்  காட்டு  வயல் - நெற்பரப்பு - 15
  3. ஆண்டிச்சோடி - நெற்பரப்பு  - 15
  4. புளியங்கியான் - நெற்பரப்பு - 20
  5. புளியங்கியான் (தென்னந்தோப்பு ) - நிலப்பரப்பு  - 30 (ஆலடி சேர்த்தது )

அபிஷேகம் செய் பயன்கள்

தொகு

வாசனைத்தைலம்,தேன்,மாப்பொடி - கடனைத் தீர்க்கும்

மஞ்சள்பொடி   - ரோகத்தைப் போக்கும்

பஞ்ச கவ்வியம்  - பாபத்தைப் போக்கும்

பஞ்சாமிர்தம்,கருப்பஞ்சாறு,பலாப்பழம்,பசுவின் நெய்   -  மோட்ஷத்தை அளிக்கும்

பசுவின் பால் - ஆயுளைக் கொடுக்கும்

பசுவின் தயிர் - சந்தான விருத்தியைக் கொடுக்கும்

வாழைப்பழம்  - பயிரை வளர்க்கும்

மாம்பழம் - வசியம்

மாதுளை - கோபத்தை போக்கும்

இளநீர் - போகமளிக்கும்

சந்தனம் - லக்ஷ்மியைக் (செல்வம் ) கொடுக்கும்

வெளி இணைப்புக்கள்

தொகு

https://www.facebook.com/thunnalaipuliyankiyan.kovil?fref=ts

உசாத்துணை நூல்கள்

தொகு

[1]


படங்கள்

தொகு
 
தேர் திருவிழா 2016
 
கொடியேற்றம்
 
கும்பாபிசேகம்
 
சப்பரம்
 
முருகன் சந்நிதி
 
நாகதம்பிரான்
 
நவக்கிரகம் சந்நிதி
  1. துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர் 2002 - திருப்பணி பரிபாலன சபை(ஆக்கம் )