துய்லியர் மலை
துய்லியர் மலை (Mount Thuillier) என்பது நிக்கோபார் தீவுகளில் உள்ள மிக உயர்ந்த மலையாகும். இந்தியப் பெருங்கடலில் பெரிய நிக்கோபார் தீவின் மீது அமைந்துள்ள இம்மலை அந்தமான் கடலின் எல்லையாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 642 மீட்டர் உயரத்தில் இம்மலை அமைந்துள்ளது.
துய்லியர் மலையின் நிலவியல் அமைப்பானது ஊடுருவும் சரளை அனற்பாறை போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. இதனுடன் சர்பண்டைன் போன்ற உருமாறிய கனிமங்கள் இணைந்து காணப்படுகின்றன.
மேலோட்டு இயக்கச் செயற்பாடு காரணமாக இம்மலை தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- Rao, P. S. N. 1996. Phytogeography of the Andaman and Nicobar Islands, India. Malayan Nature Journal 50: pp 57–79. Quoted at "Nicobars". Terrestrial Ecoregions. World Wildlife Fund.