அந்தமான் கடல்

கடல்

அந்தமான் கடல் (Andaman Sea) அல்லது பர்மா கடல் (Burma Sea) என்பது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இந்நீர்ப்பகுதி வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே, பர்மாவின் தெற்கே, தாய்லாந்திற்கு மேற்கே, அந்தமான் தீவுகள், மற்றும் இந்தியாவிற்குக் கிழக்கே அமைந்துள்ளது.

அந்தமான் கடல்
பர்மா கடல்
Andaman Sea, Burma Sea
இந்தியப் பெருங்கடலில் அந்தமான் கடல் அமைந்துள்ள இடம்
இந்தியப் பெருங்கடலில் அந்தமான் கடல் அமைந்துள்ள இடம்
ஆள்கூறுகள்10°N 96°E / 10°N 96°E / 10; 96
வகைகடல்
வடிநில நாடுகள்
அதிகபட்ச நீளம்1,202 km (747 mi)
அதிகபட்ச அகலம்647 km (402 mi)
மேற்பரப்பளவு797,000 km2 (307,700 sq mi)
சராசரி ஆழம்1,096 m (3,596 அடி)
அதிகபட்ச ஆழம்4,198 m (13,773 அடி)
நீர்க் கனவளவு660,000 km3 (158,000 cu mi)
மேற்கோள்கள்[1][2][3]

பாரம்பரியமாக இக்கடல் மீன் பிடித்தலுக்கும், மற்றும் கரையோர நாடுகளுக்கிடையே பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள பவளப் பாறைகள் மற்றும் தீவுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாகும். 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிபேரலையை அடுத்து இங்குள்ள மீன்வளம், மற்றும் சுற்றுலாத்துறை பெரும் சேதம் அடைந்தது.

இதன் தென்கிழக்கு எல்லையில், அந்தமான் கடல் மலாய் தீபகற்பத்தையும், சுமாத்திரா தீவையும் பிரிக்கும் மலாக்கா நீரிணையாகக் குறுகுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_கடல்&oldid=3642657" இலிருந்து மீள்விக்கப்பட்டது